எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காபூல், ஜூன் 8 - ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவை குறிவைத்து இரு இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். திருமண மண்டபம் ஒன்றில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு திரும்பிய போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சேதிக் சேதிக்கி கூறுகையில், அப்துல்லாவின் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் வந்து கொண்டிருந்த போது சாலயோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலை படையினர் வெடிக்க செய்தனர். இதில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் கூட அப்துல்லாவின் ஆதரவாளர்கள் இல்லை என்றார்.
ஆனால் இரு இடங்களில் தற்கொலை படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலில் அப்துல்லாவின் பாதுகாப்பு வாகனங்கள் வந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தினார். மற்றொரு இடத்தில் தற்கொலை படையை சேர்ந்தவர் தனது காலில் மறைத்து வைத்து இருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அப்துல்லா அளித்த பேட்டியில், இந்த தாக்குதலில் தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தனது பாதுகாவலர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


