முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி விசா பிரச்சினை முடிந்துபோன விசயம்: அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை.28 - நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில் ஏற்பட்ட சர்ச்சை, ஒரு கடந்த கால விஷயம். அதைப் பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. அவருக்கு விசா வழங்க இயலும் என்பதை அறிந்த பின்புதான், அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் (தெற்கு, மத்திய ஆசியப் பிரிவு) நிஷா தேசாய் பிஸ்வால் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியதாவது: "இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். மோடிக்கு விசா வழங்க இயலும் என்பதை அறிந்துகொண்டுதான் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பரில் அமெரிக்காவுக்கு மோடி வருகை தர உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

விசா விஷயத்தில் நாங்கள் ஏற்கெனவே கூறிய கருத்தில் மாற்றமில்லை. யார் விண்ணப் பித்தாலும், அதை சட்டவிதிமுறை களின்படி பரிசீலிப்போம் என்றுதான் கூறினோம்" என்றார்.

அப்போது எம்.பி. ஜார்ஜ் ஹோல்டிங், "மத வன்முறைக்கு காரணமாக இருந்ததாகக் கூறி கடந்த 2005-ம் ஆண்டு மோடிக்கு விசா மறுக்கப்பட்டதே" என்று சுட்டிக்காட்டினார். அதற்கு பதில் அளித்த நிஷா தேசாய், "2005-க்கு பிறகு அவரிடம் இருந்து விசா கேட்டு எந்தவொரு விண்ணப்பமும் வரவில்லை. எனவே, அவரது மனுவை மறுபரிசீலனை செய்யவும், புதிய முடிவு எடுப்பதற்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.

இப்போது மோடி அமெரிக்கா வர அழைப்பு விடுத்துள்ளோம். அவரை வரவேற்க தயாராகி வரும் நிலையில், முந்தைய விஷயங்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுகிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago