ஆஸ்பத்திரி மீது தாக்குதல்: எபோலா நோயாளிகல் விடுவிப்பு

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

மான்ரோவியா, ஆக.19 - லைபீரியாவில் ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடந்தது. அதை தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்ற எபோலா நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் எபோலா என்ற கொடிய உயிர்க்கொல்லி வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு எராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நோய் பாதித்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மான்ரோவியா என்ற நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியை தற்காலிக ஆஸ்பத்திரியாக மாற்றி தனி வார்டு அமைத்து 29 எபோலா நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு இந்நோயினால் உயிரிழப்பவர்களின் உடல்களை சேகரித்து அடக்கம் செய்ய தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பணியை செய்து வருகிறார்கள். ஆனால் மான்ரேவியாவில் எபோலா நோய் தாக்கம் இல்லை. வேண்டுமென்றே பீதியையும், வதந்தியையும் பரப்புவதாக அந்நகர மக்கள் கருதுகின்றனர். எனவே ஆஸ்பத்திரியில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிப்பவர்களை விடுவிக்க வேண்டும் பிணங்களை அடக்கம் செய்யும் குழுவை நகரத்தை விட்டே விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.

அதில் ஆயிரக் கணக்கான பொது மக்கல் கலந்து கொண்டனர். அரசுக்கும், எபோலா நோய் சிகிச்சைக்கும் எதிராக கோஷ்மிட்டனர். போராட்டம் வலுவடைந்த நிலையில் ஒரு கும்பல் எபோலா நோயாளிகள் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து தாக்குதல் நட்ததினார்கள். பின்னர் தனி வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த 29 நோயாளிகளை விடுவித்தனர். அதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

எபோலா ஒரு தொற்று நோய். எனவே, தப்பி ஓடிய நோயாளிகளால் அங்கு மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: