முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கான அல்-காய்தா தீவிரவாதிகள் தலைவர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

காபூல், செப்.5 - அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை தோற்று வித்த ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அல்கொய்தா இயக்கத்துக்கு அய்மன் அல் ஜவாஹிரி என்பவர் புதிய தலைவர்களாக பொறுப்பு ஏற்றுள்ளார். இந்திய துணை கண்டத்துக்கான புதிய கிளை தொடங்கப்பட்டதாக அல்-காய்தா தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி மிரட்டல் வீடியோ வெளியிட்டார்.

அல்-காய்தாவுக்கான தீவிரவாத இயக்கத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, சுமார் 55 நிமிடங்கள் பேசும் மிரட்டல் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில், "எதிரிகளுக்கு எதிராக ஜிகாத் நடத்தி அந்த மண்ணில் இறையாண்மையை மீட்டு கேலிபத்தை (இஸ்லாமிய நாடு) புதுப்பிக்க வேண்டும். அதற்கு முன்பு இந்தியாவுக்கான எங்களது இயக்க கிளை தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தை ஆஸின் உமரும் பாகிஸ்தான் அல்-காய்தா ஷரியத் கமிட்டியும் முன்னெடுத்துச் செல்வார்கள்.

எங்களது கிளை இந்திய துணை கண்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கும். காஷ்மீர், குஜராத், அஸ்ஸாம், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் ஒடுக்குதலையும் எதிர்த்து எங்கள் இயக்கம் செயல்படும்" என்று அய்மான் ஜவாஹிரி கூறுவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

இதனிடையே, சிரியா மற்றும் இராக்கில் தாக்குதல் நடத்தி உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் அமைப்பை, அல்-காய்தா தீவிரவாத அமைப்பு தங்களுக்கு இணையான போட்டியாளர்களாக கருதுவதாக பயங்கரவாத எதிர்ப்பு வல்லுனர்கள் குறிப்பிட்டதாக பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்