உக்ரைன் மீது கிளர்ச்சியாளர்கள் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

டொனெட்ஸ்க், செப்.09 - உக்ரைனில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், தங்களின் நிலைகல் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக கிளர்ச்சியாளர்கள் குற்றம்சாட்டினர்.

கிளர்ச்சியாளர்கள் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டொனெட்ஸ்க் விமான நிலையம் அருகிலுள்ள பகுதி உள்பட தங்கள் வசமுள்ள 6 நிலைகள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும் இதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதும் தொடர்ந்து குண்டு வீச்சு நடைபெற்றதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பல முறை குண்டு வெடிப்பு சப்தம் எழுந்ததாக அவை தெரிவித்தன. டொனெட்ஸ்க் நகரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது இந்நகரம்.

மேலும் அங்கு இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதையடுத்து நகரவாசிகள் பலர் தங்கலது வீடுகளைவிட்டு வெளியேறினர். கடந்த சில மாதங்களாக உக்ரைன் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. பன்னிரண்டு அம்சங்கல் கொண்ட இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தப்படி, சண்டை நடைபெற்று வரும் பகுதியிலிருந்து உக்ரைன் ராணுவத் தளவாடங்கல் அகற்றப் படும். இரு தர்பபிலும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.

கடந்த ஐந்து மாதங்களாக நிகழ்ந்த போல\ரில் பாதிக்கப்பட்ட நகரங்களில் பொதுமக்களுக்கு அனைத்து விதமான உதவிப்பொருள்களும் வழங்க வேண்டும் என்பது உடன்படிக்கையில் முக்கிய அம்சங்களாமும். ஏற்கெனவே, ஒரு முறை சண்டை இது பத்து நாள்கள் மட்டும் நீடித்தது. பின்னர் மீண்டும் ராணுவத் துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே சண்டை மூண்டது. இந்த முறை போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நாளே குண்டு வெடிப்பும் துப்பாக்கிச் சண்டையும் நடைபெற்றது வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உடன்படிக்கை ஏற்பட்டதும், உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோவும் ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசியில் உரையாடினர் என உக்ரைன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் பொதுவாய் பின்பற்றப்படுவதாகவும் ஒப்பந்தத்தை வெற்றி கரமாகச் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து உரு தலைவர்கள் பேசியதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: