நாமக்கல் மாவட்டம் மோகனூர். இங்கே, ஊருக்குள், காவிரிக் கரையோரத்தில் உள்ளது ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அப்படி என்ன சிறப்பு. எத்தனையோ உள்ளன. பாடல் பெற்ற தலம். திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது. சுவாமி முன் உள்ள தீபம் ஆடாமல் அசையாமல் எரிவதாலேயே அவருக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் வந்தது. ஒரு முறை காவிரியில் வெள்ளம் வந்து கோயில் மூழ்கிய போதும் தீபம் மட்டும் விடாமல் எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஒரு சின்ன எறும்புதானே என எதையும் அலட்சியமாக கருதக் கூடாது. உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்பது நமது முன்னோர் வாக்கு. அப்படி பார்த்தால் மிக சிறிய உயிரினங்களான எறும்புகள், மிகப் பெரிய மனிதர்களை காட்டிலும் பூமி பந்தில் அதிகம் வாழ்கின்றன. பூமியில் சுமார் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார் என்றால், எறும்புகளின் எண்ணிக்கையோ 100 டிரில்லியனுக்கும் அதிகம். உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடையையும் கணக்கிட்டால் மனிதர்களின் மொத்த எடையை காட்டிலும் அதிகமாக இருக்கும்.
340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.
காலை, வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்கள், காரமான உணவுகள், வாழைப்பழம், பச்சை காய்கறிகள், தக்காளி, பேரிக்காய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு அல்சரையும், கார உணவுகள் மற்றும் பச்சை காய்கறிகள் நெஞ்செரிச்சலையும், வாழைப்பழம் இதய பிரச்சினையையும் ஏற்படுத்துமாம்.
மனித அறிவியல் வரலாற்றில் ரசவாதம் என்பது ஒரு மிகப் பெரிய காலகட்டத்தை ஆக்கிரமித்திருந்தது. இன்றைக்கு நவீன அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் தனிமங்கள் குறித்த அறிவு பொதுவாகவே பரவலாக்கப்பட்டு விட்டது. ஆனால் கடந்த காலத்தில் சில விஞ்ஞானிகள் கூட ரசவாதத்தை நம்பினர் என்றால் ஆச்சரியம் தானே...ரச வாதம் என்பது எந்த தனிமத்தையும் தங்கமாக மாற்றுவது என்பதுதான் அது. அப்படி நம்பிய விஞ்ஞானிகளில் முதன்மையானவர் சர் ஐசக் நியூட்டன் என்றால் நம்ப முடிகிறதா..சர் ஐசக் நியூட்டன் ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் இயற்பியலில் பெரும் பங்களிப்பைச் செய்தார். ஆனால் இது ரசவாதத்தை நம்புவதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை, இது இப்போது புராணங்களின் அடிப்படையில் ஒரு போலி அறிவியலாக கருதப்படுகிறது. தனது நாட்களின் இறுதி வரை, நியூட்டன் ஒரு நாள் சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்ற முடியும் என்று நம்பினார்.
ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்காது. சன் ஸ்க்ரீன் வெயிலில் தேங்காய் எண்ணெயால் போதிய பாதுகாப்பை வழங்க முடியாது. ஏனெனில் தேங்காய் எண்ணெயில் SPF 8 தான் உள்ளது.ஆனால் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்க குறைந்தது SPF 30 இருக்க வேண்டும். காயங்களில் இதை பயன்படுத்தினால், மிகுந்த எரிச்சலை சந்திக்கக்கூடும். உணவுகளை டீப் ப்ரை செய்வதற்கு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயே சிறந்தது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


