முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இளநீரின் நன்மை

ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, செல்களை ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து, விரைவில் முதுமை தோற்றம் வருவதைத் தடுக்கும்.

கோடி வருமானம்

1890ம் ஆண்டில் பிரிட்டிஷ் காரர்களால் ஏற்படுத்தப்பட்ட, மஹாலக்ஷ்மி டோபிகாட் மும்பையில் மஹாலக்ஷ்மி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சலவை செய்யும் இடமாகும். இங்குள்ள தொழிலாளர்கள் மொத்தம் ஏறத்தாழ 7000 பேர். இவர்கள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் பகுதி நேரம் முறையில் உழைக்கின்றனர். இவர்களின் மொத்த வருமானம் 100 கோடி ஆகும். துவைத்தல், காயவைத்தல், தேய்த்தல் என அனைத்து வேலைகளையும் செய்து அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது அவர்களின் பொறுப்பு. இந்த ஏழாயிரம் பேரும் இப்படியே ஒற்றுமையாக குழுப்பணியாற்றுவதால் இவர்களுக்கு குழப்பங்கள் என்பது எழாமல் உள்ளதாக கூறுகின்றனர் இவர்கள்.

தண்டவாளத்தில் சரளைக்கற்கள் போடப்படுவது ஏன் தெரியுமா?

அதிக எடை கொண்ட ரயிலைத் தண்டவாளங்கள் தாங்குகின்றன. அவற்றை, அடிக்கட்டைகள் தாங்குகின்றன. முன்பெல்லாம் மரத்தால் ஆன அடிக்கட்டைகள் பயன்படுத்தப் பட்டன. தற்போது கான்கிரீட்டால் செய்யப்பட்ட அடிக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. தண்டவாளத்தின் மேல் ரயில் செல்லும்போது நிலைப்புத்தன்மையை உண்டாக்குவதற்காக, சரளைக் கற்களை நிரப்பி வைக்கிறார்கள். உருண்டையான அல்லது வழவழப்பான கற்கள் என்றால், ரயிலின் வேகத்தால் ஏற்படும் அதிர்வில் உருண்டு ஓடிவிடும். மாறாக கூர்மையான விளிம்புகளுடைய சரளைக் கற்கள், ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பிணைத்துக்கொள்கின்றன. இதனால் நிலைப்புத்தன்மை நன்றாகக் கிடைக்கிறது. ரயில் செல்லும்போது சரளைக் கற்களும் உருண்டு ஓடுவதில்லை. சரளைக் கற்களுக்கு மேல் சற்று உயரமாகத் தண்டவாளம் அமைக்கப்படுவதால், மண் மூடும் வாய்ப்பும் இல்லை. மழையால் தண்ணீரும் தேங்குவதில்லை. செடி, கொடிகளும் முளைப்பதில்லை. அதனால்தான் தண்டவாளத்தில் சரளைக் கற்களைப் போடப்படுகின்றன.

வாடகை ரோபோ

மூட்டு வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், ரோபோ கால் ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. டொயட்டோ மோட்டார் நிறுவனம் உருவாக்கியுள்ள வெல்வாக்ஸ் என்ற இந்த ரோபோ, பக்கவாதம், மூட்டு வலியால் தவிக்கும் நோயாளிகள் எளிதில் நடப்பதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காலுடன், ஒரு டிரெட்மில், ஒரு கண்காணிக்கும் கருவியும் வழங்கப்படுகிறது. இந்த ரோபோ, வயதானவர்களுக்கு டிரெட்மில்லில் நடைப்பயிற்சி வழங்குகிறது. யாருடைய உதவியும் இல்லாமல், வயதானவர்கள் மற்றும் கால் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக நடப்பதற்கு இந்த ரோபோ கால் உதவும். இந்த ரோபோ கால், முதற்கட்டமாக வாடகைக்கு விடப்படுகிறது. மாத வாடகைத் தொகை, 2 லட்சம் ரூபாயாம்.

நடைபயிற்சி

கூழாங்கல் நடைபாதையில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.

அரிய வைரம்

கிறிஸ்தவ மதப் பாதிரியார் ஒருவர் உலகின் மிகப்பெரிய வைரத்தைத் தோண்டி எடுத்துள்ளார். இந்த வைரம் சியரா லியோன் அதிபர் எர்னெஸ்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வைரத்தைப் பாதுகாப்பாக நாட்டுக்கு வழங்கியதற்காக அதிபர் எர்னெஸ்ட், பாதிரியாருக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago