முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மனிதனால் மட்டும்...

சராசரியாக, வாழ்நாளில் 25 கோடி தடவை அழும் அல்லது கண்ணீர் விடும் ஒரே உயிரினம் மனிதன்தான். அதிகமாக சிரிக்கும் போது கண்ணீர் வரக் காரணம், கண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுரப்பியுள்ள தசைநார்கள் அழுத்தப்படுவதால்தான். ஆனால், பச்சிளம்குழந்தைகள் அழுவதில்லை, கத்த மட்டுமே செய்யுமாம்.

வேகமாக உருகும் எவரெஸ்ட்

உலகிலேயே மிகவும் உயரமான பனி சிகரமான எவரெஸ்ட் வேகமாக உருகி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 54 மீட்டர் வரையில் அகலத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ளது. இது பனியாக மாறிய நேரத்தை காட்டிலும் 80 மடங்கு வேகமாக உருகி வருகிறது. இதற்கு பருவநிலை மாற்றமும் வேகமான காற்றும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. சுமார் 2000 வருடங்களாக உருவான பனிப்பாறைகள் 1990ஆம் ஆண்டிலிருந்து உருகத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இமாலய மலைத்தொடர்களை நம்பி சுமார் பல கோடி மக்கள் உள்ளனர். இவர்கள் குடிநீருக்கு இந்த மலைத்தொடர்களைதான் சார்ந்துள்ளனர். எனவே இந்த மலைத்தொடரில் உள்ள பனிப் பாறைகள் அனைத்தும் உருக தொடங்கினால் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போய்விடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

ஹேக்கர் உஷார்

ஹேக்கர்களிடம் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்க வலுவான பாஸ்வேர்டு வைத்து கொள்ள வேண்டும். உங்கள் போன் மறைகுறியாக்கப்பட்டதா? என்பதை செக் செய்யுங்கள். Encryted என்று கூறப்படும் இந்த பாதுகாப்பு அம்சம் என்பது டேட்டாவை ஓப்பன் செய்யும் முன் செய்ய வேண்டிய ஒரு பாதுகாப்பு வழியாகும். மேலும், போனில் உள்ள சாப்ட்வேர்களை அப்டேட் செய்ய வேண்டும்.

மின் விசிறி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

மனிதன் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தான். முன்னாளில் மர இலைகளும், பறவைச் சிறகுகளும் விசிறியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பனை ஓலைகளை நீரில் நனைத்து விசிறியாகப் பயன்படுத்தினர்.வௌவாலின் சிறகுகளைப் பார்த்து வியந்த ஜப்பானியர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டில் அத்தகைய விசிறிகளை உருவாக்கினர்.மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். இதன் தொழில்நுட்பம் மிக விரைவாகப் பிற நாடுகளுக்கும் பரவி மக்களிடம் பெரும் புகழ் பெற்றது. 

சானிடைசர்கள் : கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்

சானிடைசர் பயன்படுத்துவதால் சில தொல்லைகள் ஏற்படலாம். சானிட்டைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் உள்ளதால் வைரஸ்களை கொல்லும் ஆற்றல் படைத்தவை. ஆனால் சில சுத்திகரிப்பான்களில் ட்ரைக்ளோசன் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரைக்ளோசன் பூச்சிக்கொல்லிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வகை வேதிப்பொருள். இது விஷத்தன்மைக் கொண்டது. இது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. இத்தகைய சுத்திகரிப்பான்களை அடிக்கடி பயன்படுத்திவிட்டு ஏதேனும் உணவைச் சாப்பிடுவதால் இது எளிதில் நம் உடலில் செல்லக்கூடும். இதனால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். தசைகள் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்படும். இதனால் செரிமான அமைப்பும் பாதிப்படையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோயெதிர்ப்பு சக்தியும் பாதிப்படையும். இதனால் உடலும் பலவீனமடையும். எனவே சாப்பிடுவதற்கு முன்பு சானிட்டீசரைப் பயன்படுத்தி கை கழுவுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். முகத்தின் அருகில் கையைக் கொண்டு செல்வதினாலும் அந்த ரசாயனங்கள் சுவாசப்பாதை வழியே உடலினுள் நுழைந்து சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே ட்ரைக்ளோசன் இல்லாத சானிடைசரை வாங்கி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நமக்காகவே இருக்கிறது இயற்கையான சுத்திகரிப்பான்களான வேப்பிலையும், மஞ்சளும். இரண்டையும் நீரில் கலக்குங்கள்.. உடலை கைகளை கவலையின்றி கழுவுங்கள்.

செயற்கை சிறுநீரகம்

இதய பாதிப்புக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுவது போல் சிறுநீரகம் செயலிழந்தால் பொருத்துவதற்கு செயற்கை சிறுநீரகத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வில்லியம் பி‌ஷல், சுவோராய் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். கையடக்க வடிவிலான இந்த கருவி, காபி கப் அளவில் நானோ தொழில் நுட்ப முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்பை பயன்படுத்தி அதில் சிறுநீரக முடிச்சுகளில் இருந்து திசு செல்களை எடுத்து சல்லடையில் தேனடை உருவாக்குவது போல் செல்களை வளர வைக்கிறார்கள். பின்னர் அந்த எந்திரத்தை அடிவயிற்றுக்குள் வைத்து சிறுநீரக ரத்த நாளங்களுடன் இணைத்து பொருத்தி வைத்து விடுவார்கள். இந்த செயற்கை கருவி ரத்த சுத்திகரிப்பு மட்டுமின்றி இயற்கையாக சிறுநீரகம் செய்யும் வேலைகளை செய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago