Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஜாக்கிரதை... வேண்டாம்

உருளைக்கிழங்கு, ரொட்டி மற்றும் சிப்ஸ் போன்ற உணவு வகைகளை பொன்நிறத்தில் வறுத்து சாப்பிடுவதால் உடல் நலத்துக்கு தீங்கு இல்லை என்றும், அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக்ரிலேமிட்’ எனப்படும் ரசாயன பொருளின் அளவு அதிகரித்து, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாம்.

வெட்டுக்கிளிகளின் காதுகள் எங்குள்ளன தெரியுமா?

உலகில் உள்ள பெரும்பாலான ஜீவராசிகளுக்கும் புற ஒலிகளை கேட்கும் வகையில் காதுகள் அமைந்துள்்ளன. மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளுக்கு காதுகள் அதன் தலையிலேயே அமைந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மனிதனை போல அல்லாமல் வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் எங்குள்ளன தெரியுமா? வெட்டுக்கிளிகளின் காதுகள் அவற்றின் வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. ஒலிகளை கேட்கும் வகையில் அதன் வயிற்றில் அடிப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சவ்வு போன்ற பகுதிக்கு டைம்பனம் என்று பெயர்.

எக்ஸ்-ரே வசதி

ஸ்மார்ட்போனில் எக்ஸ்-ரே வசதி வழங்கும் ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் (HawkSpex mobile) எனும் புதிய ஆப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு நீங்கள் நினைக்கும் பொருளினுள் என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடியும். பழ வகைகளை சாப்பிடும் முன் அதனுள் ஏதேனும் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாக பார்க்க முடியும்.

காகித பாட்டில், Paper bottle

1907  ஓர் விஞ்ஞான அதிசயம் நடந்தது. அதுதான் லியோ பேக்லேண்ட் என்பவர் பாலிமர் பேக்லைட் எனப்படும் பிளாஸ்டிக்கை கண்டறிந்த ஆண்டு. அதன் பிறகு அணு ஆயுதத்தை விட உலகையே அச்சுறுத்தும் ஒரு நச்சாக மாறும் என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு உலகின் முக்கிய தேவை பிளாஸ்டிக்குக்கு ஒரு உடனடி மாற்று. இந்த சூழலில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்ததுதான் காகித பாட்டில். சுக்ஸி பாட்டில் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு இவற்றை 2 ஆண்டு ஆய்வுக்கு பின் வடிவமைத்துள்ளனர். எளிதில் மக்கக் கூடியதாகவும், கசிவுத்தன்மை அற்றதாகவும் இவை உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடா எப்படியோ பிளாஸ்டிக்கிலிருந்து தப்பினால் போதும் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.

ரத்த வங்கி தொடங்கிய வரலாறு

1616 இல் வில்லியம் ஹார்வி என்பவர்தான் விலங்குகளின் உடலில் ரத்தம் பாய்கிறது என்பதை கண்டறிந்தார். 1665 இல் ரிச்சர்ட் லோவர் என்பவர் ஒரு நாயின் உடலிலிருந்து ரத்தத்தை மற்ற நாய்க்கு வெற்றிகரமாக மாற்றி உயிர் பிழைக்க செய்தார். 1667 இல் பிரான்ஸில்தான் மனித உடலில் ஒரு ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை ஏற்றி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1668 இல் ரத்தம் தொடர்பான ஆய்வுகளுக்கு போப் தடைவிதித்தார். 1818 இல் ஒருவரின் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றி வெற்றி கண்டார் மருத்துவர் ஜேம்ஸ் புளூன்ட். 1874 இல் ஒருவரின் ரத்தத்தையே சேமித்து அவருக்கே ஏற்றும் முறையை வில்லியம் ஹைமோர் என்பவர் முதன்முறையாக சோதித்து வெற்றி பெற்றார்.  கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவர்தான் யாருடைய ரத்தத்தையும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்ற இயலாது என்பதை நிரூபித்தார். பின்னர் 1900 இல் அவர் பரிசோதனையில்தான் ஏ,பி, ஓ வகை ரத்தங்கள் கண்டறியப்பட்டன. இதுதான் ரத்த பரிசோதனையின் மிகப் பெரிய திறப்பாக அமைந்தது. மருத்துவர் ஹூஸ்டன்தான் சோடியம் சிட்ரேட்டை பயன்படுத்தி ரத்தம் உறைதலை தடுக்க முடியும் என்பதை கண்டறிந்தார். இரண்டாம் உலகப் போரின் போது பால் பாட்டில்களை சுத்தம் செய்து அதில் ரத்தத்தை அடைத்து வீரர்களுக்கு ஏற்றுவதற்காக கொண்டு செல்லப்பட்டன.  உலகின் முதல் நடமாடும் ரத்த வங்கி ஸ்பானிய உள்நாட்டு போரின் போது 1930களில் அமைக்கப்பட்டது. முதல் ரத்த வங்கி அமெரிக்காவில் 1937 இல் மார்ச் 15 ஆம் தேதி சிகாகோ கூக் கவுன்டி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல் ரத்த வங்கி 1939 இல் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.

மஞ்சளின் மகிமை

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago