முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

உடலில் 600 இடங்களில் டாட்டூ வரைந்து கொண்ட அழகி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் அழகி தனது உடல் முழுக்க 600 இடங்களில் டாட்டூ குத்திக் கொண்டுள்ளது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் மனிதர்களின் ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் இருந்துவருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ (Tattoo) என்ற பெயரில் இது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் உள்ள வெஸ்ட்ஃபீல்டு பகுதிக்கு டாட்டூ மாடல் அழகி அம்பர் லூக் (26) ஷாப்பிங் சென்றார். உடல் முழுக்க அவர் டாட்டூ வரைந்திருந்ததால், அவரது தோற்றத்தைப் பார்த்ததும் அப்பகுதிமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இவர், சுமார் 600க்கும் மேற்பட்ட இடங்களில் தனது உடலில் டாட்டூ குத்தியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம் வரை செலவிட்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆபத்து அதிகம்

மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். பாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்று நோய் வர வாய்ப்பு அதிகம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். பாலூட்டும் காலம் முடியும்போது, டி.என்.ஏ சிதைவுக்கு உட்பட்ட மார்பகச் செல்கள் தாய் உடலில் இருந்து விடுபட்டிருக்கும். அவை எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

அதிசய பாறை

மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனின் வெண்ணைப் பந்து போன்ற பாறை தகுந்த பிடிப்பு ஏதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்படியே இருக்கிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானதாக அறியப்படும் இது இயற்கையாக வந்ததா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது.

முதல் முதல்வர்

நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா விருது. இந்த விருதினை பெற்ற முதல் இந்திய, முதல்வர் என்ற பெருமை நமது தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜிக்கு சேரும். இவர் பக்தி பாடலை ஒன்றை எழுதியுள்ளார்.அந்த பாடல் குறையொன்றும் இல்லை  மறை மூர்த்தி கண்ணா என்பதாகும்.

மிதக்கும் தபால் நிலையம்

உலகிலேயே மிதக்கும் தபால் நிலையம் எங்கிருக்கு தெரியுமா.. அது வேறு எங்கும் இல்லை. இந்தியாவில்தான். அதுவும் குளுகுளு காஷ்மீரில். ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது.  அப்போதைய முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சச்சின் பைலட் ஆகியோரால்தொடங்கப்பட்டது. படகு ஒன்றில் தான் இந்த அலுவலகம் செயல்படுகிறது. ஏரியில் மிதந்தபடியே உள்ளூர் மக்களுக்கான தபால் சேவைகளை செய்து வருகிறது.   உலகளவில் இந்தியாவில் தான் அதிக தபால் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 1,55,015 தபால் அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago