முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மின்னல் மனிதனுக்கு முதுகெலும்பு பாதிப்பு இருந்தது தெரியுமா?

உலகின் மின்னல் மனிதன் என்று அழைக்கப்படுபவர் உசைன் போல்ட்.  அதிவேக ஓட்டக்காரரரான இவரது உச்சபட்ச ஓட்ட வேகம் மணிக்கு சுமார் 44 கிமீ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இவருக்கு scoliosis முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளது. இது குறித்து இவரே ஒரு பேட்டியில் எனது முதுகெலும்பு கடுமையாக வளைந்துள்ளது. இதனால் ஏற்படும் அவஸ்தைகளை நான் பொருட்படுத்துவதில்லை. அதை மீறியே கடுமையாக உழைக்கிறேன் என்கிறார். வெற்றி யாருக்கும் சும்மா கிடைப்பதில்லை என்பதற்கு உசைன் போல்ட் போன்றவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.

நோய் அறியா நகரம்

வட பாகிஸ்தானில் ஹூஞ்குட்ஸ் எனுமிடத்தில் அலக்ஸாண்டர் தி கிரேட்-ன் வழிதோன்றல்கள் என கருதப்படும் ஹூஞ்சா எனும் மக்கள் வாழும் இடம்தான் ஹூன்சா பள்ளதாக்கு. இங்குள்ளவர்கள் 70 வயது வரையிலும் இளமை, ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கின்றனர். பெண்கள் 65 வயதிலும் கருத்தரிக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் இயற்கை உணவே.

ஆர்வத்தை தூண்டும்

குழந்தைகளுக்கான உணவைத் தயாரிக்கும்போது அவர்களைக் கவரும் விதத்தில் உணவைத் தயாரிக்க வேண்டும். வெவ்வேறு வடிவங்களில் தோசை சுடலாம். வழக்கமான இட்லிக்குப் பதில், சிவப்பு அரிசி, கேழ்வரகு இட்லி என வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறிகள் சேர்த்து வித்தியாசமாகக் கொடுக்க அவர்கள் விரும்பி உண்ணுவர்.

மின் விசிறி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

மனிதன் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தான். முன்னாளில் மர இலைகளும், பறவைச் சிறகுகளும் விசிறியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பனை ஓலைகளை நீரில் நனைத்து விசிறியாகப் பயன்படுத்தினர்.வௌவாலின் சிறகுகளைப் பார்த்து வியந்த ஜப்பானியர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டில் அத்தகைய விசிறிகளை உருவாக்கினர்.மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். இதன் தொழில்நுட்பம் மிக விரைவாகப் பிற நாடுகளுக்கும் பரவி மக்களிடம் பெரும் புகழ் பெற்றது. 

தோலுக்கு மருந்து

பூவரசம் பூ, ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது. மருதாணி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது. தோலுக்கு அழகை தருகிறது. நகப்பூச்சாக பயன்படுகிறது. அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்புக்கான மருந்தாக விளங்குகிறது.

நீங்களும் எளிதாக வானொலி தொடங்கலாம்

ஃபேஸ்புக், பிளாக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் மிக எளிதாக போட்காஸ்டிங் (Podcasting) எனப்படும் வானொலியைத் தொடங்க முடியும். பிளாக்கை எப்படி இலவசமாகத் தொடங்க முடிகிறதோ, அதே போன்று போட்காஸ்டிங் வானொலியையும் இலவசமாகவே தொடங்க முடியும். தனியாக நாமே ஒரு பக்கத்தை அமைப்பதற்குப் பெரிய சர்வர்கள் தேவைப்படும்; அதனால், முதலில் ஏதேனும் ஒரு போட்காஸ்டிங் எனப்படும் சேவை இணையதளத்தை நாடலாம். இதற்குப் பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. மேலும், செயலியை செல்பேசியிலும் பதிவிறக்கிக்கொள்ள முடியும். நம் செல்பேசியிலேயே நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து, அதிலேயே எடிட்செய்யும் வசதியும் உள்ளன. எனவே ஸ்மார்ட்போன் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் போட்காஸ்டிங் எனப்படும் வானொலியைத் தொடங்க முடியும். இதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. இதற்காக ‘ஆங்கர்’ (anchor.fm), ‘ஸ்பாட்டிஃபை’ (open.spotify.com), ‘கூகுள் பாட்காஸ்ட்’ (google.com/podcasts), ‘ஆப்பிள் பாட்காஸ்ட்’ (podcast.apple.com), ‘பிரேக்கர்’ (breaker.audio), ‘காஸ்ட் பாக்ஸ்’ (castbox.fm), ‘ஓவர் காஸ்ட்’ (overcast.fm), ‘பாக்கெட் காஸ்ட்’ (pca.st), ‘ரேடியோ பப்ளிக்’ (radiopublic.com) போன்ற இணையதளங்கள் இலவசமாகவே இடம் தருகின்றன. ஆனால், அரசின் ஒலிபரப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டே போட்காஸ்டிங் எனப்படும்ஒலிபரப்பும் இருக்க வேண்டும். ஒலிபரப்புக் கொள்கைகளை ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்துக்குச் (mib.gov.in/broadcasting/air-broadcast-code) சென்று பார்த்துக்கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago