முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒரே நேர்கோட்டில்...

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது. கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் ரிஷிகேஷ் ரயில் நிலையம், அடுத்து 14 கி.மீட்டர் தள்ளி உள்ள காலேஷ்வரம் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் அரிதாக அமைந்துள்ளது.

வடகொரியாவை கலக்கும் கருப்பு அன்னங்கள் உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி

அன்னப்பறவை என்றாலே நமக்கெல்லாம் பொதுவாக பால் போன்ற வெள்ளை நிற அன்னப் பறவைகள்தான் நினைவுக்கு வரும். நம்மூர்களில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த வெள்ளை நிற அன்னப் பறவைகள் தற்போது மிகவும் அருகி விட்டன. அவை அரிய வகை பறவையினங்களில் ஒன்றாக மாறிவிட்டன. தற்போது வட கொரியாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்காக அந்நாட்டு அரசு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுதான் கருப்பு நிற அன்னப் பறவைகளை அதிக அளவில் இனப் பெருக்கம் செய்து, அதன் இறைச்சியை விற்பதன் மூலம் உணவுத்தட்டுப்பாட்டை போக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்புகிறது. இதனால் தற்போது வட கொரியாவில் கருப்பு நிற அன்னப்பறவையின் ராஜ்ஜியம் மேலோங்கத் தொடங்கியுள்ளது. அவற்றை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்யும் தொழில் மடமடவென வளர்ந்து வருகிறது. வெள்ளை அன்னப் பறவைகளைப் போலவே கருப்பு நிற அன்னப் பறவைகளும் பிரத்யேக குணங்களைக் கொண்டதாக உள்ளன. அவற்றின் இறைச்சி கருப்பு நிறத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நம்மூர்களில் ஒரு சில இடங்களில் காணப்படும் கருமை கோழிகளை போன்றவைதான் இவையும். எனவே கருப்பு அன்னப் பறவைகள் இனப் பெருக்கத் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்பிலும்...

முன்பு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நொவ்கட் மாடலில் மட்டும் செயல்படக்கூடிய யுனிகோடு 9 எனும் மென்பொருளானது தற்போது ஆண்ட்ராய்டின் அனைத்து வெர்ஷனிலும் அப்டேட் ஆகியுள்ளது. அதனால் பீட்டா எமொஜிகளான பட்டாம்பூச்சி, தரையில் சிரித்து உருளும் முகம், கோமாளி முகம், வானவில்  என பல புதிய எமொஜிகள் வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

மழை காலமும் உணவும்

மழைக்காலத்தில் விட்டமின் சி நிறைந்த பேரிக்காய், மாதுளை, மிளகு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். கிருமிகளை அழித்துவிடும். பூண்டு உடலுக்கு சூட்டை தரும். இஞ்சி வயிற்றுப் போக்கு, அஜீரணம் ஆகிய்வற்றை தடுக்கும். அதிக நார்சத்து கொண்ட ஆப்பிள் மலச்சிக்கலை தடுக்கும். ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.

தொடராக வந்த டால்ஸ்டாயின் நாவல் பாதியில் நிறுத்தப்பட்டது ஏன் தெரியுமா?

உலக புகழ் பெற்ற நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய். அவரது போரும் அமைதியும், அன்னா கரீனா போன்ற நாவல்கள் உலக புகழ் பெற்றவை. அவரது மிக சிறந்த நாவலான அன்னா கரீனா 800க்கும் அதிகமான பக்கங்களை கொண்டவையாகும். அந்த நாவல் தொடக்கத்தில் ரஷ்யன் மெசஞ்சர் என்ற இதழில் தொடர் கதையாகவே வந்தது. அவரது அரசியல் கருத்துகளுடன் பத்திரிக்கை ஆசிரியருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் அது முழு வடிவில் புத்தகமாக வெளிவந்தது.

இப்படியும் வினோதம்

பிரான்சை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் என்பவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியை மேற்கொண்டார். பொதுவாக முட்டைகளின் மீது கோழி அமர்ந்து சூடுபடுத்தி குஞ்சு பொறிக்க செய்யப்படுகிறது. ஆனால் அவர் விசே‌ஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்தார். இந்த நிலையில் 22 நாட்கள் கடந்த பின் அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன. இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார். இவர் முட்டைகளை அடைகாக்க தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார். முட்டைகளுக்கு குறைந்தது. 37 டிகிரி வெப்பம் கொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago