முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குங்குமப்பூவை சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா

குங்குமப் பூ.  சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஈரானில் அதை காட்டிலும் அதிகம். 50 ஆயிரம் ஆண்டுகள். ஏன் அப்படி? குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா...கிடையவே கிடையாது. குழந்தையின் நிறத்தை தீர்மானிப்பது குங்குமப்பூ அல்ல. ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள். ஆனால் குங்குமப்பூவின் மருத்துவ பயன்கள் அதிகம். அதில் உள்ள குரோசின் மற்றும் பிக்குரோசின் குரோசின் என்ற ரசாயனம் சுமார் 90 வகையான நோய்களுக்கான பாக்டீரியாக்களை இனம் கண்டு அழிக்கிறது. இதனால் கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால்  நோய் தாக்குதலிலிருந்து தப்பலாம் என்பதால் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் உண்மை..

‘ப்ளாக் போர்டு’

பிளாக் போர்டு என்பது அமெரிக்க நாட்டை சார்ந்த ஓர் கல்வி மென்பொருள் நிறுவனம். இது முக்கியமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடி கல்வி கற்றுக் கொள்ளமுடியும். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.  கல்வி கற்றலையும், கற்பித்தலையும் எளிமையாக்கும் ‘ப்ளாக் போர்டு’ என்ற மென்பொருள் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எளிதில் கற்கவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தலிலும் மிகவும் உதவியாக இருக்குமாம்.

பன்முகம் கொண்ட நாடு

உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்க காரணங்கள் பல உள்ளன. யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் மட்டும் 32 உள்ளன. உலகின் உயரமான இடத்தில் (14,567 அடி உயரத்தில்) அமைந்திருக்கும் தபால் நிலையம் ஹிக்கிமில் (Hikkim)இருக்கிறது.  உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனராம். உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் உள்ள சிரபுஞ்சி 2-வது இடத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நமது நாடு 2-ம் இடத்தில் உள்ளது.

எதிர்கால தொழில்நுட்பம்

நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர்  அதாவது 'டிராக் ப்லாடூன்' தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியும். வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படுமாம். வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது. வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைய முடியும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்.

செயற்கை நுண்ணறிவு மென்பொருள்

டப்பிங் படங்கள் என நமது மக்கள் சிறிது கிண்டலும் கேலியுமாக பேசப்பட்ட காலம் வெகு விரைவில் மலையேறப் போகிறது. மொழி மாற்ற படங்களின் தொழில்நுட்பத்தில் பல்வேறு புதுமைகள் உருவாகியுள்ள இன்றைய கால கட்டத்தில் அது இன்னும் ஒரு படி மேலே சென்று TrueSync என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் இயக்குநரான ஸ்காட் மன் என்பவருக்கு சொந்தமான  ’பிளாலஸ் ஏஐ’ (Flawless AI) என்ற நிறுவனம் தான் இந்த மென்பொருளை வடிவமைத்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், ஒரு நடிகரின் மொத்த செயல்பாடுகளையும் அலசி ஆராய்ந்து, அதற்கேற்ப முகம் மற்றும் வாயசைவில் மூலத்தில் நுணுக்கமான மாற்றங்களை செய்து, வசனங்களை பொருந்த வைக்கிறது.  இனி எந்த மொழியையும் நடிகர்கள் தெளிவாக பேசுவது போல காட்சியை உருவாக்கி விட முடியும் என்பதுதான் அது, இது ஆச்சரியம் தானே..

இதிலும் பாதுகாப்பு

பாஸ்வேர்டுடன் வரும் பென் டிரைவ் புதிதாக அறிமுகமாகியுள்ளது. கிங்ஸ்டன் நிறுவனம், டேட்டா டிராவிலர் 2000, யுஎஸ்பி 3.1 எனும் பென் டிரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்த பென் டிரைவில் ஆல்பா நியூமரிக் கீபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பென் டிரைவில் பாஸ்வேர்டு போட்டு லாக் செய்ய முடியும். இதனால் அதில் உள்ள டேட்டாக்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அதுமட்டுமின்றி, FIPS 197 சான்று பெற்ற என்க்ரிப்ஷன் உள்ளதால் டேட்டாக்களில் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது. சிறப்பான தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த பென் டிரைவ் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி போன்ற சேமிப்பு திறன் வசதியுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10,000, ரூ.14,000 மற்றும் ரூ.18,000 என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago