Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதன் முதலில் விமானத்தை கண்டு பிடித்தவர் இந்தியரா- ஆச்சரிய தகவல்

உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும் விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள்தான் என்று. அவர்களது முதலாவது வான் பயணம் 1903இல் அமெரிக்காவிலுள்ள கிட்டி ஹாக் என்னுமிடத்தில் நடைபெற்றது. ஆனால் யாருக்கும் தெரியாது அவருக்கு முன்பே 1895 லேயே இந்தியர் ஒருவர் விமானத்தை கண்டு பிடித்து, அதை பறக்கவும் விட்டுள்ளார். ஆனால் அங்கீகாரம் பெறாத அந்த மேதையின் பெயர் ஷிவ்கார் பாபுஜி தல்படே. மும்பையில் 1864 இல் பிறந்த அவர், அப்போதே சமஸ்கிருத இலக்கியங்களில் வித்தகராக விளங்கினார். அவர் ஆள் இல்லாத விமானத்தை மும்பையில் உள்ள சவ்பாத்தி பீச்சில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பறக்க விட்டுள்ளார். சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள விமானங்கள் குறித்து பண்டைய சாஸ்திரங்களை கற்று அதே போன்ற ஒரு விமானத்தை இவர் உருவாக்கியுள்ளார். மூங்கில் வடிவிலான அது பாதரசம் அல்லது யூரியா மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பரோடா மன்னர் சகஜியா கெய்க்வாட், மகாதேவ் கோவிந்த ஆரோன் ராய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவரது விமானம் சுமார் 1500 அடி வரை பறந்து சென்று சிறிது நேரத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆனால் அவரது முயற்சிக்கு அப்போதைய ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. பாதரசத்தை வைத்து வெடி பொருள் தயாரித்ததாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் விடுதலை ஆகி வெளியில் வந்த போது ரைட் சகோதரர்களின் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.

தொட்டால் சாவு : உலகின் கொடிய நச்சு மரம் - மன்சிநீல்

இயற்கை எப்போதும் விந்தைகளால் ஆனது. அதன் புதிர்கள் முடிவற்றதும் கூட. புளோரிடா மற்றும் கரீபியன் கடல் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகை ஆப்பிள் மரம் தான் உலகிலேயே மிகக் கொடிய நச்சு மரம் என அறியப்படுகிறது. இம் மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் ஆபத்தானது.மன்சிநீல் என்ற இந்த மரத்துக்கு பீச் ஆப்பிள் என்ற பெயரும் உள்ளது. இதன் ஏதேனும் ஒரு பகுதி நம் உடலில் பட்டால் அரிப்பு, சொறி, வீக்கம் ஏற்படும். கண்ணில் பட்டால் அவ்வளவுதான் கண் அவுட். பார்க்க கவர்ச்சியாக இருக்கும் இதன் அழகிய பழத்தை சாப்பிட்டால், சாப்பிட்டவுடனேயே நேரடியாக மேல் உலக  பயணம்தான்.அழகுக்கு பின்தான் ஆபத்து என்பது போல பார்க்க அழகாக காட்சியளிக்கும் இந்த மரம் சுமார் 50 அடி வரை கூட வளரக் கூடியது. இதை பற்றி கொலம்பஸ் கூட தனது குறிப்புகளில் சாவின் சிறிய ஆப்பிள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மடக்கும் பைக்

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதம் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.  

சர்வதேச நகரம்

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 1986-ம் ஆண்டு நிறுவப்பட்டது  ஆரோவில் நகரம். இந்நகரம் 124 உலக நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் மூலம் கட்டப்பட்டது. யுனெஸ்கோ இந்நகரை ஒரு சர்வதேச நகரம் என அங்கீகரித்துள்ளது. இங்கு, 50 நாடுகளில் இருந்து பல்வேறு கலாச்சாரத்தை பின்பற்றி வந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

இளநீரின் நன்மை

ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, செல்களை ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து, விரைவில் முதுமை தோற்றம் வருவதைத் தடுக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago