முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிசய சிறுமி

வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்ற குழந்தை 3 காலுடன் பிறந்தது. இடுப்புடன் இணைந்த 3-வது கால் இருந்ததால் நடக்க முடியாமல் சிரமப்பட்ட அந்த சிறுமிக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் சோய்டியால் நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் ரெயில் !

சீனாவில் சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டின் மீது மணிக்கு 70 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து பயணத்தை தொடங்கி உள்ளது. ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் இந்த ரெயில் மூன்று பெட்டிகளை கொண்டுள்ளது. இதில் 300 பேர் பயணம் செய்யலாம். மற்ற ரெயில் அல்லது டிராம் போக்குவரத்திற்கு ஆகும் செலவை விட குறைந்த அளவான தொகையே இதற்கு செலவாகிறது. தற்சமயம் ஹூனான் மாகாணம் சுஜோவ் நகரில் நான்கு நிலையங்களை கொண்ட 3.1 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, ரெயில் இயக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் முக்கிய சாலைகளில் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனப்பெருக்க காலத்தின் போது நிறம் மாறும் பறவை எது தெரியுமா?

ஒரு வகை தேனிசிட்டு பறவையில் ஆண் பறவைதான் இவ்வாறு நிறம் மாறுகிறது. இது sunbird எனப்படும் தேன்சிட்டு குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். மலர்களில் தனது நீண்ட அலகை வைத்து தேன் உறிஞ்சி குடிப்பதே இதன் பிரதான பணியாகும். இந்த பறவையினத்தில், ஆண் பறவை நன்கு வளர்ந்து, இனப்பெருக்க காலத்தை எட்டும்போது, அதன் நிறம், தோற்றம் மற்றும் இறகுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும். இனப்பெருக்க காலம் முடிந்த பிறகு, ஆண் பறவையின் கவர்ச்சி மறைந்து, பார்ப்பதற்கு ஒரு பெண் பறவை போல மாறிவிடும். அதாவது, சாதாரண நாட்களில் ஆண், பெண் பறவைகளின் தோற்றத்தில் பெரிய வேறுபாடு இருக்காது. மற்றபடி, அதன் உடல் உறுப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதனை தவறாக புரிந்துகொண்டு, ஆண் பறவை பெண் பறவையாக மாறுகிறது என கூறுவதும் உண்டு.

காற்றிலிருந்து உணவு

மனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் தண்ணீரும் வேண்டும் என்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு மிகவும் சிரமப்படும் பாலைவன பகுதி மக்களின் வசதிக்காக காற்றிலிருந்து தண்ணீரை தயாரிக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்திருந்தனர். தற்போது உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. பின்லாந்தை சேர்ந்த சோலார் புட்ஸ் என்ற நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு, சோலெய்ன் என்ற புதுமையான புரத மாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் தொழில்நுட்பத்தை பின்பற்றி இந்த சாதனையை சோலார் புட்ஸ் செய்துள்ளது .வழக்கமான தானிய மாவுகளில் இருக்கும் அதே சுவையும், புரதம், கார்போ ஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பு ஆகியவை சோலார் புட்ஸ் நிறுவனத்தின் காற்று மாசிலிருந்து தயாரிக்கும் சோலெய்ன் புரத்ததிலும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு. ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2,500 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், சோலெய்னுக்கு வெறும், 10 லிட்டர் தண்ணீரே போதும். இதனால், பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சோலெய்ன் புரத மாவை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

செவ்வாயில் ஆக்சிஸன் தயாரித்த நாசா

செவ்வாயில் முதன்முறையாக நாசா தனது பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் மூலம் ஆக்சிஸனை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள மோக்ஸி என்ற இயந்திரம் மூலம் இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் செவ்வாயில் உள்ள சூழலை பயன்படுத்தி, அதில் உள்ள பெரும்பான்மையான கார்பன் டை ஆக்ஸைடை  ஆக்ஸிசனாக மாற்றியுள்ளது. இந்த முயற்சியானது மனிதர்கள் எதிர்காலத்தில் செவ்வாயில் குடியேறுவதற்கான ஒரு அச்சாரமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago