Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பெண்களின் மூளை

‘அல்சமீர்’ எனும் மறதி நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு வி‌ஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றில் ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் தெரியவந்தது. எல்லா செயல்களிலும் மிகவும் உறுதியாக உள்ளதும், மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது சில பாதிப்புக்குள்ளாகுவதும் தெரியவந்துள்ளது.

இதற்கும் மருத்துவமனை

அல்ஜீரியாவில், ஃபேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்குள் மக்களை இழுக்க  தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாகக் எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.

வினோத போட்டி

அமெரிக்காவில் பிரபலமான கிஸ் எப்.எம். வானொலி நிலையம் ‘கிஸ் ஏ கியா’ என்ற பெயரில், நடத்தப்பட்ட காரை முத்தமிடும் போட்டியில் 20 பேர் பங்கேற்றனர். போட்டி தொடங்கி 50 மணி நேரம் கடந்த நிலையில், 7 பேர் தொடர்ந்து கார் மீது முத்தமிட்டவண்ணம் இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்து ஜெயசூர்யா என்ற பெண்ணுக்கு புதிய கியா ஆப்டிமா கார் பரிசாக வழங்கப்பட்டது.

எறும்பை விட மிகச்சிறிய பறக்கும் ரோபோ கண்டுபிடிப்பு

காற்று மாசை அறிவதற்காக உலகிலேயே மிகச் சிறிய பறக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் அளவு எறும்பை காட்டிலும் சிறியது என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காற்று மாசை கண்டறிவதற்காக இந்த குட்டி ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் நீண்ட முயற்சிக்குப் பிறகு தற்போது சிறிய அளவிலான பறக்கும் ரோபோவை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் எறும்பை விட சிறியதாக இருக்கும் அந்த ரோபோ காற்று மாசை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் கண்டுபிடித்த பறக்கும் கருவிகளிலேயே இதுதான் மிகச் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

டிவியில் தெரியும் உணவின் சுவையை நாவால் வருடி உணரும் புதிய ஸ்கிரீன்

தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நாவால் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியாஷிடா என்பவர்தான் இந்த கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். இதன் மூலம் டிவியில் தோன்றும் உணவு பொருள்களின் சுவையை டிவியின் மீது ஒட்டப்பட்டுள்ள ஒரு வகை பிலிம் மூலம் கண்டு பிடிக்க முடியும். அதை நாவால் வருடுவதன் மூலம் டிவியில் தோன்றும் உணவுப் பொருளின் சுவை தெரியும் என்கிறார். இதை தயாரிக்க இந்திய மதிப்பில் ரூ.65 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார். இதன் மூலம் தொலைவில் செய்யப்படும் டிஷ்களின் டேஸ்டை நம் டிவிலேயே நாவால் ருசிக்கலாம் என்றால் ஆச்சரியம் தானே..

இருளில் ஒளிரும் மனித உடல்

இருளில் மனித உடல் ஒளிரும் என்பது உங்களுக்கு தெரியுமா.. ஒரு நாளில் மிக குறைந்த அளவிலோ, மிக அதிகமாகவோ உடல் ஒளிர்கிறது. ஆனால் அதை நாம் வெறும் கண்ணால் பார்க்க இயலாது. அது வெளியிடும் ஒளியின் அளவானது நமது கண்கள் உணரும் திறனை விட 1000 மடங்கு குறைவானதாகும். ஆனால் இந்த ஒளியானது அகச்சிவப்பு கதிர்களிலிருந்து மாறுபட்டது. அது உடலின் வெப்பத்திலிருந்து வெளிப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு ஒளி உமிழும் உடலின் திறனானது காலை 10 மணி அளவில் மிக குறைவாகவும், மாலை 4 மணி அளவில் உச்சத்திலும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முற்றிலும் ஒளியற்ற அரையில் ஆரோக்கியமான நபர்களை நிறுத்தி வைத்து குறைவான ஒளியில் படம் பிடிக்கும் கேமராவை கொண்டு விஞ்ஞானிகள் இதை படம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago