தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைக்கு அனைவரின் கைகளிலும் தவழும் செல்போனை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா...மோட்டரோலா நிறுவனத்தின் ஜான் எப் மிட்சல், மார்ட்டின் கூப்பர் ஆகிய இருவரும் சேர்ந்து முதல் கம்பி்யில்லா ரேடியோ ஒலி அலைகள் மூலம் செயல்படும் செல்போனை 1973ம் ஆண்டு தயாரித்தனர். அதன்மூலம் கம்பியில்லா செல்போன் தொழில் நுட்பத்துக்கு வழிவகுத்தனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் 2 கிலோ எடையுடன் இருந்தது. பின்னர் 1983 முதல் எடை குறைவான செல்போன்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தனது உணவுக்காக மற்ற அரிய வகை மீன்களை அழித்துவரும் லயன்ஃபிஷ்-ன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெர்முடா நாட்டு உணவகம் ஒன்று லயன்ஃபிஷ்-ஐ வைத்து சமையல் போட்டியை நடத்தியது. இதற்காக ஆளில்லா ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ரோபோ கடலில் உள்ள லயன்ஃபிஷ்க்களை வேட்டையாடியது. கரைக்கு பிடித்து வந்து வியப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் மட்கி போக பல நூறு ஆண்டுகள் ஆகும் என்பது நமக்கு தெரியும். ஆனால் கண்ணாடி பாட்டில் மட்கி போக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா.. ஆயிரம் ஆண்டுகள் ஆகும். பிளாஸ்டிக்கை குறை சொல்லும் நாம்... இன்னும் என்னென்ன செய்கிறோம் தெரியுமா... பில்டர் சிகரெட்டின் மொட்டு 10 ஆண்டுகள், மீன் பிடிக்கும் தூண்டில் நைலான் 600 ஆண்டுகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் ஆயிரம் ஆண்டுகள், குளிர்பானம் அருந்தும் ஸ்ட்ரா 200 ஆண்டுகள், தகர டின் 50 ஆண்டுகள், வாகன டயர்கள் 2 ஆயிரம் ஆண்டுகள், மீன் வலை 40 ஆண்டுகள், சிந்தெடிக் துணிகள் 100 ஆண்டுகள் காலம் பிடிக்கும் என்றால் யோசித்து பாருங்கள்...
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு சுற்றுலா செல்ல 2 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது அடுத்த ஆண்டு மேற்கொள்ளப் படுகிறது. நிலவுக்கு மனிதர்கள் சுற்றுலா செல்வது இதுவே முதல் முறை ஆகும். சுற்றுலா பயணிகள் இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்சியூல் மூலம் நிலவுக்கு செல்லவுள்ளனர்.
நவீன அறிவியலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த செய்திதான் சாட்சி. முன்பு மாற்று எரிபொருள் என்ற வகையில் சாண எரிவாயு முறைகள் பின்பற்றப்ப்டடன. பெரும்பாலும் தற்போது அதையாரும் தொடர்வதில்லை என்ற போதிலும் இன்றைக்கும் அது ஒரு சிறந்த மாற்று எரிபொருள்தான். அதே போல மாற்று எரிசக்தி என்ற முறையில் தற்போது அறிவியலில் புதிய முறையாக மாட்டுச் சாணம் உள்ளிட்ட கால்நடை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை மேல்நாட்டு பண்ணைகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சண்டிகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தொடங்கப்பட்ட போதிலும் இன்னும் பரவலாகவில்லை. இதற்கு முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள வரதராஜபுரம் ஊராட்சி திகழ்கிறது. இங்கு கால்நடை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள 50 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 12 மணிநேரம் இந்த ஆற்றலை பயன்படுத்தி விளக்குகள் எரிகின்றன. இதை இன்னும் திட்டமிட்டு விரிவாக்கினால் கிராமத்துக்கான மின் தேவையையே சமாளிக்கலாம் என்கின்றனர்.
முன்பெல்லாம் காரில் பயணம் சென்றால் ஒவ்வொரு ஊரிலும் தகவலை கேட்டு கேட்டு செல்ல வேண்டும். பின்னர் சாலை அடையாள பலகைகளை கொண்டு ஓரளவுக்கு பயணித்தோம். அதன் பின்னர் தொலைபேசி, செல்போன்கள் உதவின. அதைத் தொடர்ந்து தற்போது ஜிபிஎஸ் கருவிகள் வந்து விட்டன. இருந்த போதிலும் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கடினம். தற்போது ஓட்டுநர்களின் கவலையை போக்க வந்து விட்டது ஹோலோகிராஃபிக் வழிகாட்டி. இதன் மூலம் முன்புற கண்ணாடியில் ஜிபிஎஸ் வரைபடங்கள் ஒளி ஊடுருவம் தன்மையுடன் கூடிய ஹோலோ கிராஃபிக் படங்களாக தெரியும். இதனால் ஓட்டுபவருக்கும் காட்சி பாதிக்காது. செல்லும் வழியையும் சட்டென்று புரிந்து கொள்ள இயலும். வெகு விரைவில் உலகின் வாகன பயணத்தை மாற்றி அமைக்க வந்து விட்டது ஹோலோகிராஃபிக் வழிகாட்டி. இது தொழில் நுட்பத்தின் ஆச்சரியம் தானே..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


