Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பழந்தமிழ் பாட்டு :

பழந்தமிழர்கள் அன்றாடம் தங்களது பணியின் போது ஏராளமான இசை வகைமைகளில் பாடல்களை தாமாகவே புனைந்து பாடினர். நெடுந்தூரம் வண்டிப் பயணத்தின்போது தென்பாங்குப்பாட்டு (தெம்மாங்கு) பாடி பயணித்தனர். தொன்று தொட்டு பாடி வந்துள்ள தமிழ் இசைப்பாட்டு வகைகளில் சில : அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், சந்துகவரி, சாக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில் குரவை, குறத்தி, கூடல், கொச்சகச்சார்த்து, கோத்தும்பி, தோழிப்பாட்டு, சங்கு சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திகாப்பு, தெள்ளோளம், தோளேடக்கம், நிலைவரி, நையாண்டிளா, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுன்னம், மயங்கு திணை நிலைவரி, முகச்சார்த்து, வள்ளைப்பாட்டு, சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, கோலாட்டம், ஆனந்தக்களிப்பு, கீர்த்தனம் முதலியன. தமிழ் நாடோடி இசைப்பாடல் வகைகள் : உழவுப்பாட்டு, ஓடப்பாட்டு, நலங்கு, ஆரத்தி, ஊஞ்சல், புதிர்ப்பாட்டு, பழமொழிப் பாட்டு, கோமாளிப்பாட்டு, ஏற்றப்பாட்டு, இறைவைப்பாட்டு, காவடிப்பாட்டு, கப்பற்பாட்டு, படையெழுச்சி, தாலாட்டு, கல்லுளிப்பாட்டு, பாவைப்பாட்டு, வைகறைப்பாட்டு, மறத்தியர் குறத்தியர் பாட்டுகள், பள்ளுப்பாட்டு, பலகடைப்பாட்டு, வள்ளைப்பாட்டு, பிள்ளைப்பாட்டு முதலியன.

தீபாவளி ஓர் ஆச்சரியமான செய்தி

19 ஆம் நூற்றாண்டு வரை தமிழின் எந்த இலக்கிய ஆவணத்திலும் தீபாவளி என்ற சொல் கிடையாது. வட நாட்டில் இருந்தும், விஜயநகர பேரரசின் போதும் தமிழகத்துக்கு தீபாவளி வந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தீபாவளியை இந்துக்கள் தவிர சமணர்கள், புத்தர்கள் மற்றும் சில வெளிநாடுகளிலும் கொண்டாடுகின்றனர்.1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் - தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. பழங்காலத்தில் தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தீபாவளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். எது எப்படியோ இன்றைக்கு தீபாவளிக்கு புத்தாடை புனைந்து, பலகாரங்கள் செய்து, புதுப்படம் ரீலிஸ் செய்தால்தான் தமிழனின் தீபாவளி நிறைவு பெறும்.

தொலைநோக்கியை கண்டுபிடித்தவர்

1609 ஆம் வருடம் ஹாலந்து நாட்டில் 'ஹான்ஸ் லிப்பர்ஷி' என்பவர் ஒரு மூக்கு கண்ணாடி கடை வைத்திருந்தார். அவரிடம் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டு இருந்தான். ஒரு நாள் அவனுக்கு பொழுது போகவில்லை. எனவே அவன் மூக்கு கண்ணாடிக்கு பயன்படும் ஒவ்வொரு லென்சாக எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தான். திடீரென்று குழி ஆடியை கண்ணுக்கு அருகிலும், குவி ஆடியை  சிறிது தொலைவிலும் பிடித்து கொண்டான். தூரத்தில் உள்ள சர்ச் கோபுரத்தை அந்த இரு கண்ணாடிகள் வழியாக பார்த்தான். அவன் கோபுரத்தை லென்ஸ் வழியாக பார்த்தவுடன் ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அந்த கோபுரம் அவனுக்கு மிக அருகில் இருப்பது போல தெரிந்தது. இதை தனது முதலாளியான ஹான்ஸ் லிப்பர்ஷி வந்தவுடன் கூறினான். அவர் அதை ஒரு தகரக் குழாயில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கலிலியோ அங்கு வருகிறார். இந்த விவகாரம் விஞ்ஞானியான கலிலியோவுக்கு தெரிய வந்தது. உடனே கலிலியோ இது குறித்து தெரிந்து கொண்டு இரண்டு லென்ஸ்களை பயன்படுத்தி கருவி ஒன்றை உருவாக்கினார். பின்னர் அதை சற்று மேம்படுத்தி, கொஞ்சம் வித்தியாசமாக, லென்ஸ்கள் முன்னும் பின்னும் நகரும் மாதிரியான குழாயில் அடைத்தார். அதற்கு "டெலஸ்கோப்" எனப் பெயரிட்டார். அதன் பிறகு வானியல் சரித்திரமே தலைகீழாக மாறிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த கதை.

சூடான நீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்ட பின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

வாட்டும் வெப்பம்

ஆர்க்டிக் பிராந்தியத்தில் சராசரியைவிட 20 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பக்காற்று வீசுகிறதாம். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியைவிட சுமார் 5 டிகிரி செல்சியஸ்வரை அதிக வெப்பம் இருக்கும். இந்த முறை அது 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வடதுருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

ஆதாரை ஈஸியாக லாக் செய்ய..

உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு மோசடி செய்பவர்களால் அணுகப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  ஆதார் அட்டையை வைத்திருப்பவர்களுக்கு  தனது ஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதியை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. Lock/Unlock செய்வது எப்படி? https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் செல்லவும்.‘Aadhaar service’ என்ற பிரிவின் கீழ் ‘Lock & Unlock’ என்பதை கிளிக் செய்யவும். UID பட்டனை செலக்ட் செய்து அதில் உங்களது UID நம்பர், பெயர், PIN code உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும். Send OTP’ என்பதை கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும். இப்போது உங்களது ஆதார் எண் லாக் செய்யப்பட்டுவிடும். மீண்டும் உங்களது ஆதார் எண்ணை அன்லாக் செய்வதற்கு ஆதார் வலைப்பக்கத்தில் Unlock பட்டனை கிளிக் செய்து விர்ச்சுவல் ஐடியைப் பதிவிட்டு send OTP மற்றும் submit கொடுத்தால் அன்லாக் ஆகிவிடும். அவ்வளவுதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago