முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வழித் தோழனாக

கூகுள் நிறுவனத்தின் மேப் சேவை தற்போது, ஜி.பி.எஸ் மூலம் குரல் வழிகாட்டும் முறை உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது. மேலும், பெட்ரோல் பங்க், உணவகங்கள், விடுதிகளை தெளிவாக காட்டுகிறது.

கல்லறையிலும் வந்து விட்டது க்யூ ஆர் கோட்

கியூ. ஆர் கோட்(QR CODE) அப்படி என்றால் என்ன என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாம் வாங்கும் பொருட்களில் எல்லாம் தற்போது சர்வசாதாரணமாகக் காணப்படுவது க்யூ ஆர்-கோட். கணணியானது ஒரு பொருளின் விலையை மற்றும் என்ன பொருள் என்று அறிய இந்த க்யூ ஆர்-கோட் பயன்படுகிறது. தற்போது இதனைக் கல்லறையிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். வழமையாக கல்லறையில் ஒருவர் புதைக்கப்பட்டால் அவரது கல்லறையில் அவர் எப்போது பிறந்தார் எப்போது இறந்தார் என்று மட்டும் எழுதுவது உண்டு. ஆனால் தற்போது இந்தக் கியூ ஆர் கோட்டை கல்லறையில் பதிக்கிறார்கள். என்ன ஒரு ஐடியா இனி நீங்கள் மயானத்துக்குச் செல்லும் போது, அங்கே காணப்படும் பல கல்லறைகளில் உள்ள கியூ-ஆர் கோட்டை உங்கள் கைகளில் உள்ள மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்தால் போதும். அக்கல்லறையின் கீழ் புதையுண்ட நபரின் வாழ்க்கை குறித்த வீடியோவை காணலாம். அல்லது இறந்தவருடைய வாழ்க்கை சரிதையை டவுன்லோடு  செய்து படிக்க முடியும். இனி இறந்தவர்கள் டிஜிட்டல் முறையில் நம்முடன் பேசும் காலம் வெகு தொலைவில் இல்லை.

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

சியோமி எம்ஐ டேப்லெட்

சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ பேட் 3 டேப்லெட் இம்மாத இறுதியில் வெளிவருகிறது. எம்ஐ பேட் 3 டேப்லெட் 128GB விலை இந்திய மதிப்பில் ரூ.20,000 வரை இருக்கும் என்றும் 256GB விலை ரூ.22,500 வரை இருக்கும். இத்துடன் புதிய காந்த சக்தி கொண்ட கீபோர்டு ஒன்றையும் சியோமி அறிவித்திருக்கிறது. இதன் விலை ரூ.1000 என கூறப்படுகின்றது. 9.7 இன்ச் 2048x1536 பிக்சல் டிஸ்ப்ளே, 2.6 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் பிராசஸர் மற்றும் 8GB ரேம் வழங்கப்படும்.

தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து முதன்முறையாக அறிமுகம்

ஜப்பான் நாட்டில் முதன் முறையாக தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்காக பிரத்யேக வடிவில் வாகனங்களை வடிவமைத்துள்ளது. இந்த ரயில் பஸ் பேருந்து சேவை கடந்த மாதம் ஜப்பானில் உள்ள கையோ நகரில் தொடங்கப்பட்டது. சாலையில் ஓடும் போது ரப்பர் டயரிலும், தண்டவாளத்தில் ஓடும் போது இரும்பு சக்கரத்திலும் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு சக்கரங்களின் செயல்பாடுகளையும் 15 விநாடிகளுக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

தமிழகத்திற்கு பெருமை

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் தமிழர். பொருளாதார நிபுணரும் வழக்கறிஞருமான கோவையைச் சேர்ந்த சண்முகம் செட்டிதான் இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர். இவரின் பொருளாதார மேதைமையைப் பார்த்து, அவர்தான் சுதந்திர இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கத் தகுதி படைத்தவர் என காந்தி முடிவு செய்தார். ஜவஹர்லால் நேருவுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சண்முகம் செட்டியை தனது அமைச்சரவையில் நிதியமைச்சராக்கினார். சண்முகம் செட்டி 1947 நவம்பர் 26ம் தேதி முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கோவையில் பிறந்த சண்முகம் செட்டி சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago