முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

1200 ஆண்டுகள் பழமையான மம்மி உடல் தோண்டி எடுப்பு

பெரு நாட்டில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், 800 முதல் 1,200 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்ட மிகவும் பக்குவமாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு மம்மி உடல் நாட்டின் தலைநகரான லிமாவிற்கு அருகில் உள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதில் வினோதம் என்னவென்றால், இந்த மம்மி இன் உடல் முழுவதும் கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்டுள்ளது. அதன் முகத்தை அந்த மம்மி அதன் கைகளால் மூடியுள்ளது. இது தெற்கு பெருவியன் இறுதிச் சடங்கு முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.சான் மார்கோஸின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டு பிடித்துள்ளனர். இது 15 ஆம் நூற்றாண்டில் பெருவின் சிறந்த அறியப்பட்ட மச்சு பிச்சு கோட்டையை நிறுவிய இன்கா நாகரிகத்திற்கு முந்தையது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உடல்நலம் காக்க

காலை, வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்கள், காரமான உணவுகள், வாழைப்பழம், பச்சை காய்கறிகள், தக்காளி, பேரிக்காய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு அல்சரையும், கார உணவுகள் மற்றும் பச்சை காய்கறிகள் நெஞ்செரிச்சலையும், வாழைப்பழம் இதய பிரச்சினையையும் ஏற்படுத்துமாம்.

பறக்கும் எலக்ட்ரிக் கார்

ஒரு காலத்தில் தரையில் சீறிப் பாயும் கார்கள் வானில் பறக்கும் என்று கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு அந்த கற்பனை உண்மையாகி வருகிறது. வெகு விரைவில் உலகம் முழுவதும் பறக்கும் கார்கள் வானில் வலம் வரப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதற்கு அச்சாரமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வித்தியாசமான கார் பந்தயம் இதை நிரூபித்துள்ளது. அதிலும் இதில் பங்கேற்ற அனைத்து கார்களும் வானில் பறக்கக் கூடியவை. அது மட்டுமின்றி இவை அனைத்தும் பெட்ரோல் போன்ற எரிபொருள் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை. சுத்தமாக சொன்னால் பறக்கும் எலெக்ட்ரிக் கார்கள். அக்டோபரின் இறுதியில் நடைபெற்ற இந்த போட்டிகள் குறித்த ஆச்சரிய வீடியோ தற்போது வெளியாகி நெட்டை கலக்கி வருகிறது. இந்த போட்டியினை தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலடா ஏரோநாட்டிக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் வடிவமைத்து, தற்போது நடத்தி முடித்துள்ளது. இப் போட்டிக்கு ‘ஏர்ஸ்பீடர்'-இன் முதல் பகுதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாலைவன பகுதியில், வெறும் 300மீ தொலைவிற்கு மட்டுமே இந்த போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள எக்ஸா (EXA) எனப்படும் சர்வதேச போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஒத்திகை போன்றதாகும். இவ்வாறான பந்தயங்கள் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பிற்கு ஊக்கமளிக்கும்.

களையெடுக்கும் ரோபோ

தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

செல்ஃபிசைடு மோகம்

தொடர்ச்சியாக செல்ஃபி எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு நண்பர்களிடம் எப்போது பார்த்தாலும் கருத்து கேட்பது. செல்ஃபிசைடு என அழைக்கப்படுகிறது.கடந்த 2 மாதங்களில் மூன்று பெண்கள் செல்ஃபிசைடால் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல, செல்ஃபியும் கூட ஆபத்துதான்.

ஒரு சமயத்தில் ஒரு நாசி துவாரத்தின் வாயிலாக மட்டுமே சுவாசிக்க முடியும்

இன்றைய நவீன யுகத்தில் மன அழுத்தம் குறைய சுவாச பயிற்சி, பிராணயாமம் என பல்வேறு மூச்சு பயிற்சிகளும், யோக பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நாம் நாசித் துவாரத்தின் வாயிலாக மூச்சை இழுத்து அதை நுரையீரலுக்கு அளிப்பதன் மூலம் பிராண வாயு உடலுக்கு சென்று தேவையான ஆற்றலை அளிக்கிறது. ஆனால் நாம் சுவாசிக்கும் போது ஒரு நேரத்தில் ஒரு நாசித் துவாரத்தின் வாயிலாக மட்டும்தான் சுவாசிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா... ஒரே நேரத்தில் இரு நாசித் துவாரங்கள் வாயிலாகவும் மனிதன் சுவாசிப்பது கிடையாது. கேட்பதற்கு மிகவும் இது சிக்கலானது. ஒரு துவாரத்தின் வழியாக சுவாசித்தாலும் இரு நாசிகளும் சம அளவில் பிராண வாயுவை பகிர்ந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாசித் துவாரத்தின் வாயிலாகவும் சுவாசிப்பது சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மாறி மாறி நடக்கும் என்பதும் ஆச்சரியமான ஒன்று தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago