முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆந்த்ராக்ஸ் தீவு

வடக்கு ஸ்காட்லாந்தில் இருந்து 0.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது க்ரூய்நார்ட் தீவு. 2-ம் உலக போரின் போது பிரிட்டிஷ் இராணுவ ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட இரசாயன ஆயுதங்கள் பரிசோதனை செய்ததால் அந்த தீவு முற்றும் நாசமானது. இதனால் 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை மக்கள் அங்கு செல்ல அஞ்சுகிறார்கள்.

இந்தியர்களின் திறமை

நிக்கும்பா வம்சத்தை சேர்ந்த சாந்த் மகாராஜாவால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாந்த் பாவ்ரி படிக்கிணறு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இந்தியர்களின் கணிதவியல் வல்லமைக்கும், கட்டிடக்கலை நேர்த்திக்கும் இது சிறந்த சான்றாகும். பாலைவன பிரதேசமான இங்கு தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இந்த படிக்கிணறு கட்டப்பட்டிருக்கிறது. இது 100 அடி ஆழமும், 13 தளங்களும் கொண்டு வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் எப்போதுமே குளிர்ச்சியுடன் இருப்பது அதிசயம். இந்த படிக்கிணற்றில் மொத்தம் 3500 படிகள் இருக்கின்றன. பதிமூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் இந்த படிகள் ஒவ்வொன்றும் அச்சுப்பிசகாமல் ஒரே போல அமைக்கப்பட்டிருப்பது நமக்கு பிரம்மிப்பை உண்டுபண்ணும்.

பேனாவின் மூடியில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

செல்போனே கதி என்று கிடக்கும் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு பேனா பெரிய அளவில் பழக்கத்தில் இருக்காது. பேனா மூடியை கடிக்கும் பழக்கம் உடைய நபர்களின் பாதுகாப்பு கருதி தான் இந்த துளை வைக்கப்படுகிறது. கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். பேனா மூடியை பழக்க தோஷத்தில் கடித்துக் கொண்டிருக்கும் நபர்கள், அதை ஏதேச்சையாக விழுங்கி விட்டால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. பேனா மூடியை விழுங்கி, அது மூச்சுக்குழாயை அடைத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம், அந்த சமயத்திலும் கூட மூச்சுக்காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த துளை.

ராபர்ட் கிளைவ் திருமணம் எங்கு நடந்தது தெரியுமா?

மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு இங்கிலாந்து அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் இணைந்துதான் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ராபர்ட் கிளைவ், சென்னையில்தான் திருமணம் செய்து கொண்டார். செயின் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சர்ச்சில் இருக்கும் திருமண ரிஜிஸ்டரில் ராபர்ட் கிளைவ் கையொப்பமிட்டிருக்கிறார்.  அதை ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தானே.

குரல் தேடல்

இணையதளத்தில் தகவலை தேட வேண்டுமென்றால் குரல்வழி மூலம் கூகுள் தேடுபொறியில் தேடலாம். குரல்வழி தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளை கூகுள் சேர்த்துள்ளது.

ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி

இன்றைக்கு எந்த ஒரு ஆண்டுவிழா, பள்ளி, கல்லூரி விழா என்றால் தவறாமல் இடம் பிடிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக கயிறு இழுக்கும் போட்டி இடம் பெறும். இருந்தாலும் இதையெல்லாம் யாரும் விளையாட்டாக கூட மதிப்பதில்லை. ஆனால் ஒரு கால கட்டத்தில் இந்த போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தன என்றால் ஆச்சரியம் தானே.. 1900 தொடங்கி 1920 வரையிலான காலகட்டத்தில் இந்த விளையாட்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு கயிறு இழுக்கும் போட்டி உள்பட 33 விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago