நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா என்று ஒரு காலத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் 969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி ‘அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைகோளில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் பயணித்தனர். இந்தச் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட பின், 102 மணி நேரம் 45 நிமிடம் 39 விநாடி அளவில் பயணித்து நிலவை சென்றடைந்தது. நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் தனது கால் பதித்தார். அங்கு பதிந்த காலடி தடங்கள் அப்படியே 100 மில்லியன் ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும்.. ஏன் தெரியுமா.. சந்திரனின் மேல் புறத்தில் காற்று, நீர் போன்ற சூழல் கிடையாது. எனவே காலடி தடத்தை காற்றோ, நீரோ அழிக்க வாய்ப்பு இல்லை. எனவே கோள்களில் மாற்றம் ஏற்படும் வரை அதாவது சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் வரை அது அப்படியே இருக்கும் என்றால் ஆச்சரியம் தானே...
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி, நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.
கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனித உறுப்பு மூளைதான். மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாளம் பாளமாக கசங்கிப் போயிருப்பது போன்றவைகள்தான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை. சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவில் இருக்கும். இதில், பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையேயான ஓய்வில்லாத மின் ரசாயன பரிமாற்றம் தான் நம் சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருக்கும்.
புவியிலிருந்து சுமார் 472 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும், ஐந்து மில்லியன் முதல் 10 மில்லியன் வயது கொண்ட ரிக்-210 நட்சத்திரம் திடீரென 5.67 புவிநாட்களில் அதன் ஒளியிலிருந்து 15 சதவிகித பிரகாசத்தை இழந்துள்ளது. திடீரென இவ்வாறு நிகழ்ந்துள்ளது மர்மமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைக்கு அனைத்து துறைகளிலும் ரோபோடிக்ஸ் இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம்.. பார்வையற்றோரின் பார்வையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த தொழில்நுட்பம் விரைவில் நிஜமாக போகிறது. ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (HKUST) ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் ஒரு மனித, குழிவான விழித்திரையை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரி புரோஸ்டெடிக் கண்ணை உருவாக்கியுள்ளது, இது நானோஒயர்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை விழித்திரை சிலிகான் பாலிமரில் பொருத்தப்பட்டுள்ளது, இது நானோ கனெக்டர்களுக்கு இடையில் ஒரு இடையீடாக பங்கு வகிக்கிறது. இந்த செயற்கை விழித்திரை ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 0.3 மைக்ரோவாட் முதல் 50 மில்லி வாட் வரை பரந்த அளவிலான தீவிரங்களின் ஒளியைக் கண்டறிய முடியும். தற்போது சோதனை வடிவில் இருக்கும் இவற்றில் இன்னும் களையப்பட வேண்டிய ஏராளமான சிக்கல்கள் நிறைய உள்ளன. இருந்த போதிலும் விரைவில் அவை நிஜமாக்கப்படும் என நம்பலாம்.
நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் செல்போன் மற்றும் டேப்லெட்களில் விளையாடி பொழுதை கழிக்கு குழந்தைகள் பேசி பழகுவதில் காலதாமதமாகுவதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். 6 மாதம் முதல் 2 வயது வரையிலான 894 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளிடம் இருந்து அதை தவிர்க்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


