முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உடலுக்கு நன்மை

வசம்புவை விளக்கெண்ணெயில் துவைத்து, விளக்கில் கரித்து, பொடியாக்கி பாலில் இழைத்து குழந்தையின் நாவில் தடவினால், வயிற்று வலி சரியாகும். ஞாபக சக்தி கூடும். வலியை போக்கும். பதட்டத்தை தணிக்க கூடியது. நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் வசம்பு, இதய ஓட்டத்தை சீர் செய்யும். சிறுநீரக கோளாறை போக்கும். ரத்தத்தை சுத்தப்படும்.

உற்ற நண்பன்

மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ முதியோர், நோயாளிகளுக்கு உதவும் விதமாக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் உள்ள இந்த ரோபோ முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பேச்சுத் துணையாக செயல்படுகிறது.

கறிவேப்பிலையில் இவ்வளவு இருக்கா?

கறிவேப்பிலை அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது.சுமார் 10 முதல் 20 கறிவேப்பிலை இலையை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பிறகு அதில் இருந்து இலைகளை அகற்றுவதற்காக அதை வடிக்கட்டவும். வெறும் கறிவேப்பிலை தண்ணீர் சிலருக்கு பிடிப்பதில்லை. சுவைக்காக எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.இது கலோரிகளை எரிக்கவும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவுகிறது. இதன் மூலமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுப்பதோடு ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு எடையை குறைக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையில் மஹானிம்பைன் என்ற ஆல்கலாய்டு உள்ளது, இது உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

திப்பு சுல்தான் ஓவியம் ரூ.6.32 கோடிக்கு விற்பனை

இந்திய சுதந்திர போரின் போது மைசூர் சமஸ்தானத்து மன்னர்களான ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் படைகள் 1780 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் படைகளை ஓட ஓட விரட்டியடித்தனர். பொள்ளிலூர் என்ற இடத்தில் இந்த சண்டை நடைபெற்றது. இந்த வெற்றியை குறிப்பிடும் வகையில் பொள்ளிலூர் சண்டை என்ற தலைப்பில் சுமார் 32 அடி நீளமுள்ள 10 மிகப் பெரிய காகிதங்களில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் ஓவியமாக தீட்டப்பட்டது. இந்த ஓவியம் லண்டனில் புதன் கிழமை ஏலத்துக்கு வந்தது. அப்போது 630000 பவுன்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.32 கோடிக்கு விற்பனையானது.

தலையாட்டிச் சித்தர்

பிரும்மரிஷி மலை, திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் உள்ளது. 210 மகா சித்தர்கள் வாசம் செய்த இங்கு ஜீவ சமாதி அடைந்த தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்றளவும், இங்கு, தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறாராம்.

மெழுகில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

பிரேசில் நாட்டிலுள்ள கார்னவ்பா என்னும் பனை மரத் (carnauba palm tree) தழையிலிருந்து கார்னப்வா மெழுகு உண்டாகிறது. பழுப்பு நிறத்திலுள்ள இம்மெழுகு தரையை அழகு படுத்தவும், மெழுகுவர்த்தி தயாரிக்கவும் பயன்படுகிறது. பெர்ரி என்னும் தாவரத்திலிருந்து உண்டாகும் பேபெர்ரி மெழுகிலிருந்தும் (bayberry wax) கூட மெழுகு வர்த்தி தயாரிக்கப்படுகிறது. தேனீக்கள் தம் தேன் கூட்டைக் (honeycombs) கட்டும்போது சுரக்கும் திரவமும் மெழுகாக விளங்குகிறது. ஒப்பனைப் பொருட்கள் (cosmetics), மெழுகுவர்த்திகள், பாலிஷ்கள், வண்ணத் தீட்டுகோல்கள் (crayons) மற்றும் செயற்கை மலர்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இம்மெழுகு பயன்படுத்தப்படுகிறது. கம்பளி இழை கொண்ட விலங்குகளிலிருந்து (wool-bearing animals) பெறப்படும் கம்பளி இழை மெழுகு (wool wax) லெனோலின் (lanolin) எனப்படுகிறது; இதுவும் ஒப்பனைப் பொருட்கள் மற்றும் சோப்புகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கிடைக்கும் மெழுகுகளில் 90% பெட்ரோலியம் மெழுகே ஆகும். இது மணமற்றது, சுவையற்றது, வேதியியல் வினை புரியாதது என்பதால், பல்வேறு பயன்பாடுகளுக்கும் இம்மெழுகு ஏற்றதாக விளங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago