முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இங்கிலாந்துக்கு முதலிடம்

பிறந்தது முதல் 3 மாதங்களில் நீண்ட நேரம் அழுது அடம் பிடித்து தொந்தரவு செய்யும் குழந்தைகள் குறித்த ஆய்வில் உலக நாடுகளின் குழந்தைகள் இடம் பெற்றனர். இதில், இங்கிலாந்து குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரமும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களும் அழுகின்றன. கனடா, இத்தாலியிலும் இதேநிலைதான்.

ரோபோ போலீஸ்

நாள் முழுவதும் பணிபுரிய தற்போது போலீஸ் வேலையிலும் ‘ரோபோ’ ஈடுபட்டுள்ளது. உலகில் முதன் முறையாக துபாயில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த ரோபோ துபாய் போலீஸ் சீருடை அணிந்துள்ளது. அது போலீஸ் அதிகாரிகளுடன் கைகுலுக்குகிறது. ராணுவ வீரர்கள் போன்று கம்பீரமாக சல்யூட் அடிக்கிறது. தெருக்களில் போலீசார் போன்று ரோந்து பணியும் செல்கிறது.

நாசா அபாரம்

கெப்ளர் டெலஸ்கோப் மூலம் நாசா ஆராய்ச்சி மையம் புதிய கோள்களை கண்டறிந்துள்ளது. ஒன்று இரண்டல்ல. நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி 1,284 புதிய கோள்களைக் கண்டறிந்துள்ளனர். ஒரே முறையில் இத்தனை கோள்களை நாசா கண்டறிவது இதுதான் முதல் தடவை என்பதும் கூடுதல் சிறப்பு.

வாட்டர் ப்ரூப் ஸ்பீக்கர்

வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கரான லாஜிடெக் வொண்டர் பூம் எனும் ப்ளூடூத் ஸ்பீக்கர் மழையில் நனைந்த படியும், நீச்சல் குளத்திலும் பயன்படுத்த முடியும். மேலும் 360 டிகிரி சரவுண்ட்டுக்கு ஒலியை கொடுக்கும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரத்திற்கு கேட்கலாம். 5 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும், எந்தவித சேதமும் ஏற்படாதாம். ஒரே நேரத்தில் இரண்டு ஆடியோ டிவைஸ்களில் கனெக்ட் செய்ய முடியும்

சாகோன் நாகரீகம்

1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாகோன்கள் இன்றைய நியூ மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சாகோன்கள் 100க்கும் அதிகமான அறைகள் கொண்ட லாவிஷ் கற்களால் ஆன வீடுகளில் வசித்து வந்துள்ளனர். மேலும், இங்கு பெண்களே ஆட்சி செய்ததாகவும், அவர்கள் தங்களது சக்திகளை தங்களின் மகள்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

தங்கத் தகடு பொருத்திய கார், பைக்கில் வலம் வரும் இளைஞன்

தங்க ஆபரணங்களை அணிவதில் பெரும்பாலானோருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. ஆனால் அதே வேளையில் உடலில் யாரும் கிலோ கணக்கில் தங்கத்தை நகைகளாக செய்து அணிந்து கொண்டு வலம் வருவதில்லை. வியட்நாமைச் சேர்ந்த 39 வயது இளைஞர் இதில் சற்று வேறு ரகம். இவர் தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்டவர். இவரது உடலில் இவர் அணிந்திருக்கும் தங்க நகை மட்டும் எவ்வளவு தெரியுமா 2 கிலோ.  ஆன் ஜியாங் மாகாணத்தில் வசித்து வரும் டிரான் டக் லோய் என்ற இளம் தொழில் முனைவோர்தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர்.  இவருக்கு விதவிதமான உருவங்களை தங்க ஆபரணங்களாக செய்து அணிந்து கொள்வதில் தீராத ஆர்வம் உடையவர். ஆப்பிரிக்க பல்லி, டிராகன் போன்ற பல்வேறு உருவங்களை தங்கத்தால் செய்து விரலில் மோதிரமாகவும், கழுத்தில் சங்கிலியாகவும் அணிந்துள்ளார். அது மட்டுமா, தனது காரை முழுக்க முழுக்க தங்கத் தகடுகளால்  வேய்ந்துள்ளார். காரின் டயரில் இருக்கும் இரும்பு பிளேட்களுக்கு பதிலாக தங்கத்தில் செய்து பொருத்தியுள்ளார். அது மட்டுமா தங்கத் தகடுகளால் வேயப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் இவர் வைத்துள்ளார். இதற்காக அந்நாட்டு பணத்தில் மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளார். இதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மில்லியன் கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்