முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதுமையான உணவு

பின்லாந்தில் உள்ள வி.டி.டி. தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம், லபீர்னந்தா தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றில் இருந்து கார்பன்டை ஆக்சைடை பிரித்து எடுத்து அதிலிருந்து புரோடீன் பவுடர் தயாரித்துள்ளனர். இதை மனிதர்கள்,  விலங்குகள் உணவு பொருளாக பயன்படுத்த முடியுமாம். இந்த புரோடீன் பவுடரை மின்சாரத்துடன் சேர்த்து எங்கு பயன்படுத்தினாலும் அது உணவுப் பொருளாக கார்பன்டை ஆக்சைடு மற்றும் மின்சாரத்துடன் சேர்ந்து தயாரிக்கப்படும் புரோடீன் பவுடர் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி காய்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பயிர்களின் மகசூலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நாசாவின் ரோவரை தரையிறங்க செய்த இந்திய பெண் சுவாதி

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது குறித்து ஆராய நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கிருந்து தண்ணீரின் வழித்தடங்களை படமெடுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. அதெல்லாம் சரி.. அதை விட முக்கியம் அதை தரையிறங்க செய்த குழுவின் தலைவர் யார் தெரியுமா.. சுவாதி மோகன் என்ற இளம் பெண். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது பெற்றொர் பெங்களுரைச் சேர்ந்தவர்கள்.சிறு வயதிலேயே பெற்றோர் அவரது அமெரிக்கா வந்துவிட்டனர். சுவாமி தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வெர்ஜீனியா-வாஷிங்டன் மெட்ரோ பகுதியில்தான் கழித்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடியிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி படிப்பை முடித்தபோது அவருக்கான பரந்த உலகம் திறந்திருந்தது. நாசாவில் பணிக்கு சேர்ந்தது முதலே ஏற்றம்தான். அங்கு படிப்படியாக விரைவாக முன்னேறி பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு வந்தார். வெற்றிகரமாக சாதித்தும் காட்டியுள்ளார். இதற்கெல்லாம் உந்துதலாக இருந்தது எது என்று கேட்டால், சிறுவயதில் தான் பார்த்த சயின்ஸ் பிக்சன் தொடரான ஸ்டார் டிரக்தான் என்கிறார் சிரித்தபடி. ஹேட்ஸ் ஆப் சுவாதி.

எச்சரிக்கை எச்சரிக்கை

அமெரிக்காவில் தயாராகியுள்ள ஐபோன் வடிவிலான ஸ்மார்ட்போன் வடிவ துப்பாக்கியில் 9 மி.மீ. அளவு கொண்ட குண்டுகளைப் பயன்படுத்த முடியும். இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வர உள்ள இந்த நவீன துப்பாக்கியை ஆன்லைனில் 12,000-த்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது ஆச்சரியமான தகவல்.

‘வெஸ்ட்-4’ ரோபோ

தேளில் இருந்து வி‌ஷம் பிரித்து எடுக்கும் புதிய ‘ரோபோ’: விஞ்ஞானிகள் தயாரித்தனர். தேளின் வி‌ஷத்தில் மருத்துவ குணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உயிர்காக்கும் மருந்துகளில் கலக்கப்படுகிறது. தற்போது, தேள்களிடம் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது மிகவும் எடை குறைவானது. சிறிய அளவிலும் உள்ளது. இந்த ‘ரோபோ’ தேளில் இருந்து விரைவாகவும், பாதுகாப்பாகவும் வி‌ஷத்தை பிரித்து எடுக்கின்றன.தேளிடம் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுப்பது மிகவும் கஷ்டமானது. இறந்த தேள்களின் கொடுக்குகளில் இருந்து மின்சார அதிர்ச்சி மூலம் வி‌ஷம் பிரித்தெடுக்கப்படுகிறது. தேளில் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’வை விஞ்ஞானி மொயுத் மிகாமல் கண்டு பிடித்துள்ளார். அதற்கு ‘வெஸ்ட்-4’ என பெயரிட்டுள்ளார். இந்த ரோபோ மிக சிறியதாக இருப்பதால் ஆய்வகம் அல்லது வெளியிடங்களில் வைத்து பணியாற்ற முடியும்.

புதிய வசதி

உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கில் உணவுகளை ஆர்டர் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஃபேஸ்புக் ஆர்டரிங்க்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், வரும் அக்டோபர் மாதம் முதல் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதி நடைமுறைப்படுத்தவுள்ளது.

பறக்கும் கார்கள்

புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல, ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago