முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அமெரிக்கா எதிலெல்லாம் நம்பர் 1 என உங்களுக்கு தெரியுமா?

உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதம் மட்டுமே உள்ள அமெரிக்கர்கள், உலகில் உள்ள மொத்த குப்பைகளில் 30 சதவீதத்தை அவர்களே உற்பத்தி செய்கின்றனர். உலகில் அதிகமாக காகிதத்தை பயன்படுத்துவதில் அமெரிக்க தனியார் நிறுவனங்களே இன்றும் முன்னணியில் உள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு நொடிக்கும் 10 ஆயிரம் காலன் எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலம் 2,20 லட்சம் பவுன்ட் எடை அளவுக்கு கார்பனை வெளியிடுகின்றனர். அமெரிக்க நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு 25 டிரில்லியன் பிளாஸ்டிக் கப்கள் வீசி யெறியப்படுகின்றன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அமெரிக்கர்கள் 25 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசியெறிகின்றனர். உலகிலேயே ஆண்டுதோறும் அதிகமான மரங்கள் அமெரிக்காவிலேயே வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் அமெரிக்கர்கள் வீசும் அலுமினிய குப்பைகளை கொண்டு தேசத்துக்கு தேவையான வர்த்தக விமானத்தையே உருவாக்கி விடலாம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

ஒட்டகம் தன் உடலுக்குள் நீரை சேமிப்பது உண்மையா

ஒட்டகங்களை பற்றிய கட்டுக்கதைகளில் ஒன்று, அது கிடைக்கும் போது நீரை பருகிவிட்டு, உடலின் ஒரு பகுதியில் சேமித்து வைத்துக் கொள்கிறது என்பதுதான் அது. ஆனால் அறிவியல் பூர்வமான உண்மை அதுவல்ல. அது நீண்ட காலம் நீரை குடிக்காமல் கொளுத்தும் பாலைவனத்தில் சமாளிப்பதற்கு காரணம் அதன் ரத்ததில் உள்ள ஓவல் வடிவ ரத்த அணுக்கள் தான். மேலும் இவை 240 சதவீதம் வரை விரிவடையும் தன்மை கொண்டவையும் கூட. மற்ற உயிரினங்களுக்கு 150 சதவீதம் வரை மட்டுமே விரிவடையும். மேலும் இவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்தம் அடர்த்தியானாலும் அதில் நீந்தி சென்று ஆக்ஸிசனை ரத்த நாளங்களுக்கு கொண்டு செல்லும் திறன் பெற்றுள்ளன. எனவே ஒட்டகம் தனது எடையில் 40 சதவீதம் வரை நீரிழப்பை சமாளிக்கிறது. இது தான் ஒட்டகம் நீண்ட நாள்களுக்கு நீர் குடிக்காமல் சமாளிப்பதன் ரகசியம்.

ஐந்து பொத்தான்கள்

சீனாவை ஆண்ட டி.ஆங் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில்தான் சீனர்கள் தங்கள் சட்டைகளுக்கு ஐந்து பொத்தான்களை வைத்து அணியும் பழக்கத்தை மேற்கொண்டனர்.அதற்கு கன்ஃபூஷியஸ் மதத்தின் அன்பு, அறிவு, துணிவு, வாய்மை, நேர்மை ஆகிய ஐந்து கொள்கைகளையும் பின்பற்றவேண்டும் என்பதுதான்.

காகித கேப்ஸ்யூல்

பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..

குட்டைப் பாவாடை

ஆடைகள் ஆண் பெண் வேறுபாட்டை காட்டி வருகின்றன என்ற போதிலும் பால் பேதத்தை, அதாவது பாரபட்சமான அணுகுமுறையை அவை உருவாக்கக கூடாது என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக பாலின சமத்துவத்தை அதான்ங்க.. ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை பிரச்சாரம் செய்யும்  வகையில் ஸ்பெயினில் உள்ள பில்பாவ் நகரில் இந்த பிரச்சாரம் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு குட்டை பாவாடை அணிந்து வந்த 15 வயது சிறுவனை இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரத்தில் அமைந்திருக்கும் Castleview Primary Schoolதான் தற்போது தனது பள்ளியில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் குட்டை பாவாடை அதாவது ஸ்கர்ட் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என அறிவித்துள்ளது. பாலின பேதத்தை களைந்து ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்துக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங் மால் முதன்முதலில் எங்கு கட்டப்பட்டது

இன்றைக்கு நவீன நாகரிக உலகில் பேஷன் மால்களை கடக்காமல் நம்மால் ஒரு நாளை கூட தாண்ட முடியாது... முதன் முதலில் ஷாப்பிங் சென்டர்கள் எங்கு கட்டப்பட்டன தெரியுமா...ரோமில்தான். அங்குள்ள குயிரினல் ஹில் பகுதியில் தான் டாமஸ்கஸ் கட்டிட கலைஞர் அப்போலோ டோரஸ் என்பவரால் முதன் முதலில் இரண்டாம் நூற்றாண்டில் 5 அடுக்கு ஷாப்பிங் மால் கட்டப்பட்டது. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பெரிய சந்தை வணிக வளாகம் இதுவாகும். தற்போது இந்த கட்டிடம் ஒரு அருங்காட்சியகமாக பராமரிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago