Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஜிபிஎஸ் இல்லாமலே

இன்றைய நவீன மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடங்கள், சாலை குறியீடுகள், திசைகாட்டிகள், ஜிபிஎஸ் கருவிகள் என ஏரானமானவற்றை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியும் சிலர் வழி தவறி விடுகின்றனர். ஆனால் எந்த வரைபடத்தையும் வைத்திருக்க முடியாத நீருக்கு அடியில், பல்லாயிரம் மைல்கள் ஆழமுள்ள கடலுக்குள்.. அதுவும் சூரிய ஒளி புகாத கும்மிருட்டில்.. ஆனால் சில சுறாக்கள் தங்கள் உடலிலேயே இயற்கை ஜிபிஎஸ் அல்லது காந்தமானியை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பல நூறு மைல்கள் சென்றாலும் மீண்டும் தனது இருப்பிடத்துக்கு மிகச் சரியாக அவை திரும்பி விடுகின்றனவாம்.  ஆய்வில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடலுக்கு அடியில் நீந்தி சுறாக்கள் மிகச் சரியாக ஆஸ்திரேலியா வந்து விட்டு 9 மாதங்களுக்கு பிறகு திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது. இது இயற்கையின் ஆச்சரியம் தானே..

உலகிலேயே மிகப்பெரிய பூரான் இங்கிாலந்தில் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உள்ள Northumberland மலைப்பகுதியில் கேம்ப்ரிட்ஜ் பல்கலை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வரலாற்றில் இது வரையில் இல்லாத வகையில் உலகிலேயே மிகப் பெரிய சைஸிலான பூரான் இன ஊர்வன பூச்சியை கண்டு பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு கார் சைஸூக்கு மிகப் பெரியதாக இருந்துள்ளது. சுமார் 2.7 மீட்டர் நீளமும், 50 கிலோ எடையும் கொண்டதாக அது இருந்தது என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். உயிர் படிமமாக கிடைத்துள்ள அந்த பூச்சி சுமார் 326 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு உயரம்!

சைபீரியாவிலுள்ள அல்டாஸ் மலைப்பகுதி, உலகிலேயே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் குறைவானதாகவே இருக்கும்.இந்தப் பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் 4 ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்காக, அங்கு டாய்லெட் ஒன்று உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 8530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டாய்லட் உலகின் மிக அபாயகரமான டாய்லெட். டாய்லெட் உபயோகத்திற்கான டிஷ்யூ பேப்பர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவே கொண்டு வரப்படுகிறது.

ஸ்மார்ட் பல்பு

சி.சிடிவி கேமராக்களின் விலை சற்று அதிகமாய் உள்ளதால் அனைவராலும் அதனை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. தற்போது சி.சிடிவி கேமராவிற்கு நிகரான ஸ்மார்ட் பல்பு இந்தியச் சந்தையில் பிரபலமடைந்து வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட் பல்பில் 360 டிகிரி எச்.டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட் பல்பில் வைஃபை, ஆடியோ ஸ்பீக்கர், மைக், மோஷன் டிடெக்டர், ஐ.ஆர் கட், 128 ஜிபி வரையிலான மெமரி கார்டு வசதி மற்றும் ஆர்.ஜி.பி நிறத்தை மாற்றும் சேவை எனப் பல சேவைகளை பட்ஜெட் விலையில் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. விலையும் மிகவும் குறைவுதான். ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பிறகென்ன வீட்டில் எங்கு தேவையோ வாங்கி மாட்டுங்கள்.. இனி திருடன் உங்களிடம் வாலாட்ட முடியாது..

செவ்வாய் கிரகத்தில்....

பூமியை போன்று விவசாயம் செய்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கூறும் நாசா விஞ்ஞானிகள் அங்கு விவசாயம் செய்வதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர். பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விண்வெளி வீரர்கள் தங்கிருக்கும் அறைகளில் விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புகை ஏன் மேல் நோக்கி செல்கிறது

நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். உண்மைதான் புகை இருக்கும் இடத்தில் நிச்சயம் நெருப்பு இருக்கும். அது இருக்கட்டும்... அவ்வாறு வெளிவரும் புகை ஏன் மேல் நோக்கி செல்கிறது தெரியுமா.. புவிபரப்பு முழுவதும் காற்று இருப்பது நமக்கு தெரியும்... அவ்வாறான காற்றை காட்டிலும் புகையின் அடர்த்தி குறைவு. எனவே புகை, புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி செல்கிறது. நீராவியின் அடர்த்தியும் காற்றை விட குறைவு என்பதால்தான் அதுவும் மேல் நோக்கி செல்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago