முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பறக்கும் கார்கள்

புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல, ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

குழந்தைகளின் உடலில் எலும்புகளின் எண்ணிக்கை அதிகம்

மனித உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206 என்பது பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தெரியாத ஒரு விசயம் என்னவென்றால் குழந்தை பிறந்தவுடன் அதன் உடலில் எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். வளர்ந்த மனிதனின் உடலில் காணப்படுவதைப் போல அல்லாமல் குழந்தையின் உடலில் 300 எலும்புகள் காணப்படும். மனிதன் வளர வளர அவற்றில் ஒரு சில எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுதியில் 206 என்ற எண்ணிக்கைக்கு வந்து விடுகின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்..

ஆன்மீக ஸ்தலம்

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

தேனீக்கள் : ஒரு லிட்டில் ஸ்டோரி

ஓய்வில்லா உழைப்புக்கு மட்டுமல்ல சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கு தேனீயே அடையாளமாக இருக்கின்றது ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே சேமித்துக் கொள்கிறது. எனவே உணவுப் பதப்படுத்துவதில் முன்னோடியும் தேனீதான். தேனீக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  மொத்தம் 44 இனங்கள் உள்ளன. அறிவியலில் ஏப்பிடே (Apidae) எனும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) எனும் இனத்தைச் சார்ந்தவை தேனீக்கள். மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். தேனீக்களில் முதல் வகை இராணித் தேனீ. இதுதான் தேனீக்களில் மிகப் பெரியது. தலைமை வகிக்கும். இதன் ஆயுள் 3 ஆண்டுகள். இதன் வேலை இனப்பெருக்கம் செய்வது. 2 ஆவது ஆண் தேனீ. இதன் வேலை கூட்டை பராமரிப்பது, ராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. 3ஆவது வேலைக்காரத் தேனீ. ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்தையும் செய்யும். இதன் ஆயுள் 2 மாதங்கள். செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக் காலமாக தேனீக்கள் வேகமாக அழிந்து வருவது வேதனைக்குரியதுதானே..

கூகுள் போட்டோ

கூகுள் நிறுவனத்தின் பிரபல ஆப்-ஆன கூகுள் போட்டோ, பிளே ஸ்டோரில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிளே ஸ்டோரில் வெளியான இரண்டு ஆண்டுகளில் கூகுள் போட்டோ ஆப் இந்த சாதனையை படைத்துள்ளது. கூகுள் போட்டோ ஆப்பில் அன்லிமிடெட் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படுவதோடு, பல்வேறு புதிய வசதிகளுக்கான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

தாகம் தீர்க்கும்

சர்க்கரை நோய், உடல் உஷ்ணம், அதிக வியர்வை, அதிகளவில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றால் நாவறட்சி ஏற்படும். அதிக வயிற்றுப்போக்கால் நீர்ச்சத்து வெளியேறுவதாலும் நாவறட்சி உண்டாகிறது. அதிக தாகம், நாவறட்சியை போக்க ஆவாரை, அரச இலை, நித்திய கல்யாணி ஆகியவை மருந்தாகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago