முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தொட்டால் சாவு : உலகின் கொடிய நச்சு மரம் - மன்சிநீல்

இயற்கை எப்போதும் விந்தைகளால் ஆனது. அதன் புதிர்கள் முடிவற்றதும் கூட. புளோரிடா மற்றும் கரீபியன் கடல் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகை ஆப்பிள் மரம் தான் உலகிலேயே மிகக் கொடிய நச்சு மரம் என அறியப்படுகிறது. இம் மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் ஆபத்தானது.மன்சிநீல் என்ற இந்த மரத்துக்கு பீச் ஆப்பிள் என்ற பெயரும் உள்ளது. இதன் ஏதேனும் ஒரு பகுதி நம் உடலில் பட்டால் அரிப்பு, சொறி, வீக்கம் ஏற்படும். கண்ணில் பட்டால் அவ்வளவுதான் கண் அவுட். பார்க்க கவர்ச்சியாக இருக்கும் இதன் அழகிய பழத்தை சாப்பிட்டால், சாப்பிட்டவுடனேயே நேரடியாக மேல் உலக  பயணம்தான்.அழகுக்கு பின்தான் ஆபத்து என்பது போல பார்க்க அழகாக காட்சியளிக்கும் இந்த மரம் சுமார் 50 அடி வரை கூட வளரக் கூடியது. இதை பற்றி கொலம்பஸ் கூட தனது குறிப்புகளில் சாவின் சிறிய ஆப்பிள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

lightning, மின்னல்

பெரும்பாலும், மின்னல் தாக்குதலுக்கு பலியானவர்கள் மரங்களின் அடியில் தஞ்சம் புகுந்தவர்கள்தான். இது ‘சைட் ஃபிளாஷ்' என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு அருகில் ஒரு உயரமான பொருளை மின்னல் தாக்கும்போது, அங்கே இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தாக்குதல் பரவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  மின்னல் தாக்குதலினால் 2019 ஜூலை 25 முதல் 31 வரை அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் நடந்ததாகவும் . வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதிகளில் அதிகப்படியாக மின்னல் தாக்குதல்கள் நடந்தன என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்டார்டிகா துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் செய்த முதல் இந்திய பெண்

அண்டார்டிகா எனப்படும் பூமியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பனிப்படர்ந்த துருவ பிரதேசம். இங்கு பயணம் மேற்கொள்வது மிகப் பெரிய சாகசம். ஏறக்குறைய உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் பயணம் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அந்நாட்டில் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றும் இந்திய வம்சாவளி பெண்ணான  ஹர்பிரீத் சான்டி முதன்முறையாக துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். 40 நாட்கள் அப்பகுதியில் அவர் மேற்கொண்டு திரும்பிய சாகச பயண செய்தி தற்போது ஊடகங்களில் வேகமாக  பரவி வருகிறது. அவரது துணிச்சலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

நாய்களின் திறமை

நாயின் மூளையில் உள்ள மோப்ப சக்தி, மனிதனின் மோப்ப சக்தியை விட 40 மடங்கு அதிகம். எனவே நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் மனித நோயை கண்டறிவதற்கான முழுத் திறனும் நாய்களுக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்களுக்கு உதவும் வகையில், பார்கின்ஸன்ஸ் நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாய்களின் மூக்கில் உள்ள துவாரத்தில் இருந்து வெளிப்படும் மெல்லிய ஆற்றலைப் பயன்படுத்தி நாய்களால் நோய்களைக் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இதனால் நோய் கண்டறிவதற்கு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கும் கடந்த காலத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சந்திரனில் நில நடுக்கம் ஏற்படுவதை புகைப்படம் எடுத்த சந்திரயான் விண்கலம்

நமது பூமியில் நில நடுக்கம் ஏற்படும் என்பது நமக்கு தெரியும். பூமிக்கடியில் இருக்கும் டெக்டானிக் பிளேட் என்று அழைக்கப்படக் கூடிய பாறைத் திட்டுகள் நகரும் போது இது போன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.  இதே போல, சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகள் போல தட்டுகள் அமைந்திருப்பதும், அவை நகர்கின்ற போது நிலநடுக்கம் ஏற்படுவதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்தியா அனுப்பிய சந்திரயான் இது தொடர்பான  படங்களை எடுத்து அனுப்பியுள்ளது என்றால் ஆச்சரியம் தானே...

புதிய கிரகம்

பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.  இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago