முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தண்ணீர் நல்லது

தண்ணீர் என்பது ஆக்சிஜன் மற்றும்  ஹைட்ரஜன் கலந்த கூட்டுக் கலவையாகும். தண்ணீரை அதிக அளவில் குடித்தால்  உடல் எடை குண்டாகாமல் சீரான உடலுடன் அழகாக இருக்க முடியும் என்கிறார்கள்  மருத்துவ நிபுணர்கள். தண்ணீரை அதிக அளவில் குடிப்பதால் யூரிக் அமிலம் போன்ற தேவையற்ற கழிவுகள் விரைவில் சிறு நீர் வழியாக வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் உடல், மூளை செயல்பாட்டு திறன் மிகச்சிறப்பாக செயல்பட்டு சுறுசுறுப்பையும் தரும்.

செவ்வாயில் ஆக்சிஸன் தயாரித்த நாசா

செவ்வாயில் முதன்முறையாக நாசா தனது பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் மூலம் ஆக்சிஸனை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள மோக்ஸி என்ற இயந்திரம் மூலம் இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் செவ்வாயில் உள்ள சூழலை பயன்படுத்தி, அதில் உள்ள பெரும்பான்மையான கார்பன் டை ஆக்ஸைடை  ஆக்ஸிசனாக மாற்றியுள்ளது. இந்த முயற்சியானது மனிதர்கள் எதிர்காலத்தில் செவ்வாயில் குடியேறுவதற்கான ஒரு அச்சாரமாக எதிர்பார்க்கப்படுகிறது.

வந்திருச்சு புதுசு

எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.

மனிதனுக்கு போட்டியாக...

லண்டனைச் சேர்ந்த குழு ஒன்று படம் வரையும் புதிய ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது. லைன் அஸ் (Line-us) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ கடினமான படங்களை கூட அழகாகவும் மிகக் குறுகிய நேரத்திலும் வரையக்கூடியது. சந்தைக்கு வரும் முன்னரே இணையதளத்தில் 30 மணி நேரத்தில் 1000 லைன் அஸ் ரோபோக்கள் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிறம் மாறிய பூக்கள்

கால நிலை மாற்றத்தால் பூக்களின் நிறங்களும் மாறி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்காக நீங்கள் பரிசளிக்கும் ரோஜாவின் நிறம் ஒரே இரவில் மாறிவிடுமோ என்று கவலைப்பட தேவையில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கால நிலை மாற்றத்தால் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக புற ஊதா கதிர்களின் வீச்சு காரணமாக இது போன்ற மாற்றங்கள் தாவரங்ளில் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து கடந்த 2020இல் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள கிளம்சன் பல்கலை நடத்திய ஆய்வில் புற ஊதா கதிர்கள் பூக்களின் வண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இவ்வாறு ஏற்பட்டுள்ள வண்ண மாற்றத்தை நமது வெறும் கண்களால் உணர முடியாது. ஆனால் அதே நேரத்தில் மகரந்த சேர்க்கைக்காக ஈர்க்கப்படும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளுக்கு இது மிகப் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது என்பதும் இதில் கண்டறியப்பட்டுள்ளது.

நிலவின் வரைபடத்தை முதலில் உருவாக்கியவர்

ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்(Johannes Hevelius) சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் வாழ்ந்த ஒரு வானவியலாளர் மற்றும் வானவியலுக்கான கருவிகள் செய்தவர். சந்திரனின் முதல் அட்லஸை உருவாக்கித் தொகுத்த வானியலாளர். அது செலினோகிராஃபியா ( Selenographia) என்ற பெயரில் 1647-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் மேற்பரப்பின் ஆரம்பகால விரிவான வரைபடங்களில் ஒன்றையும் அதன் பல அம்சங்களுக்கான பெயர்களையும் கொண்டுள்ளது. சந்திரனில் உள்ள  மலைகளுக்கான அவரது சூட்டிய பெயர்களில் இன்னும் சில (எ.கா. ஆல்ப்ஸ்) இன்னும் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நினைவாக சந்திரனில் உள்ள பள்ளத்துக்கு ஹெவிலியஸ் பள்ளம் (Hevelius crater) என்றும் பெயரிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago