முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முட்டை ஆரோக்கியம்

முட்டையின் மஞ்சள் கரு உண்மையில் ஆரோக்கியமான ஒன்று. அதை நாம் கொலஸ்ட்ரால், கொழுப்பு என்ற ஒற்றை காரணம் காட்டி தவிர்த்து வருகிறோம். ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் நிறைய வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் இருக்கின்றன. வைட்டமின்: எ, டி, கே, ஈ. மற்றும் பி மினரல்ஸ்: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், ஜின்க்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

2000 ஆண்டுகள் பழமையான கல்லறையில் எழுதப்பட்டிருந்தது பூஜ்யமா?

கர்நாடக மாநிலம் தஷிண கன்னட மாவட்டத்தில் உள்ள கடப்பா தாலுகாவில் ராமகுஞ்சா கிராமத்தில் பாண்டவர் குகை எனப்படும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கல்லால் ஆன கல்லறை ஒன்று இருப்பதாக உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எம்எஸ்ஆர்எஸ் கல்லூரியின் தொல்லியல் துறை தலைவர் பேரா. முருகேஷி மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன கல்லறையை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி அதன் மேற்புறத்தில் உள்ள கல்லில் வட்ட வடிவில் அல்லது பூஜ்ய வடிவில் எழுதப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து முருகேஷி கூறுகையில், அதன் மேற்புறத்தில் காணப்படுவது வட்டமா அல்லது அப்போதே இங்கு வாழ்ந்த மக்கள் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிந்துள்ளனரா என்பது வியப்பாக உள்ளது. இது குறித்து மேலும் ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றார். கற்கால தொல்லியல் எச்சத்தின் மீது எழுதப்பட்டுள்ளது பூஜ்யமா என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி பொது மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உருளை கிழங்கின் தாயகம் எது தெரியுமா?

உலகம் முழுவதும் இன்றைக்கு செல்வாக்கு செலுத்தும் உணவு பொருளில் உருளை கிழங்கு முதலிடம் வகிக்கிறது. இன்றைக்கு உருளைகிழங்கை சாப்பிடாத ஆட்களே இல்லை என்ற அளவுக்கு பரவியுள்ளது. ஆனால் உருளை கிழங்கு முதன் முதலில் எங்கு பயிரிடப்பட்டது தெரியுமா.. பெரு நாட்டில் தான் முதன் முதலில் பயிரிடப்பட்டது. இன்றைய பெரு நாட்டுப்பகுதியே உருளைக்கிழங்கின் தாயகம் எனப்படுகிறது அங்கிருந்து 1536-ல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது. அதுவும் பெருவில் எப்போது பயிரிடப்பட்டது தெரியுமா... கிட்டத்தட்ட சுமார் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. அதே போல பெருவில் மட்டும் சுமார் 1000 வகையான தக்காளி ரகங்கள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

சுற்றுச்சூழலுக்காக தானாகவே 16 ஆண்டுகள் சட்டம் பயின்ற முதியவரை உங்களுக்கு தெரியுமா?

சீனாவைச் சேர்ந்தவர் வாங் என்லின். இவர் 3 வகுப்பை கூட நிறைவு செய்யாதவர். ஆனால் இவர் தனக்கு தானே 16 ஆண்டுகள் சட்டம் பயின்றார். எதற்கு மற்றும் எப்படி தெரியுமா.. அவரது கிராமத்தை அருகில் இருந்த ரசாயன ஆலை மாசுபடுத்தியது. அதற்கு எதிராக சட்டப் போர் தொடுக்க வேண்டுமானால் சட்டம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஆனால் இவரால் அனைத்து சட்ட நூல்களையும் வாங்க பணமில்லை. எனவே உள்ளூரில் உள்ள புத்தக கடையில் பை நிறைய மக்காசோளத்தை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அங்கேயே அமர்ந்து புத்தகங்களை படிக்க ஏற்பாடு செய்து கொண்டார். டிக்சனரியின் உதவியால் அவர் சட்டம் பயின்று வழக்கையும் நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றார். இறுதியில் தனது வழக்கில் கடந்த 2017 இல் வெற்றியும் பெற்றார் என்றால் ஆச்சரியம் தானே.

தண்ணீர் பற்றாக்குறையால்....

ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்ளும். அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago