காற்று மாசுபாட்டால் சூரிய மின்சக்தி உற்பத்தி 25 சதவீதம் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சீனா, அரேபிய தீபகற்பம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காற்று மாசுபாடு அதிகம் உள்ளதால் மின்சக்தி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சர்க்கரை நோய், உடல் உஷ்ணம், அதிக வியர்வை, அதிகளவில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றால் நாவறட்சி ஏற்படும். அதிக வயிற்றுப்போக்கால் நீர்ச்சத்து வெளியேறுவதாலும் நாவறட்சி உண்டாகிறது. அதிக தாகம், நாவறட்சியை போக்க ஆவாரை, அரச இலை, நித்திய கல்யாணி ஆகியவை மருந்தாகின்றன.
இனு, உப்பை ஒதுக்காமல் அழகிற்காக பயன்படுத்தலாம். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பதால், கன்னத்தின் அழகு அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து உடலை நன்கு தேய்த்து கழுவ சருமம் அழகாகவும், பொலிவோடும் காணப்படும்.
மாவீரன் நெப்போலியன் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் வைத்திருந்தார். அந்த நூலகத்தில் இடம் பெற்ற ஒரு தமிழ் நூல் கம்பராமாயணம்.
சுகா ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், தேகம், மனம், பிராணன், புலன்கள் சோர்வடையாது. உடலின் கீழ் பகுதியும், இடுப்பும் நரம்புகளும் பலப்படுத்தப்படும். முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகிறது. சுகாசனத்தால், தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது. பூஜை, தியானம், போஜனம் ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம்.
இந்த ஆண்டுக்கான வேளாண் கண்காட்சி பெங்களுருவில் நடைபெற்றது. இந்தாண்டுக்கான கண்காட்சியை பெங்களுரூ வேளாண் அறிவியல் பல்கலை கழகம் ஒருங்கிணைக்கிறது. நவம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற இந்த கண்காட்சி ஜிகேவிகே வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய தானிய விதைகள், நாட்டு மாட்டு ரகங்கள், விலையுயர்ந்த பாரம்பரிய ஜாதி மாடுகள், வேளாண் கருவிகள், உழவு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும் பங்கேற்றனர்.இதன் ஹை அட்ராக்சனாக விளங்கியது எது வென்றால் ஒரு நாட்டு காளை மாடு ரூ.1 கோடிக்கு விற்பனையானது என்பதுதான். போரே கவுடா என்பவருக்கு சொந்தமான மூன்றரை வயது கொண்ட Hallikar ரக காளை மாடுதான் தற்போது அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. உயர் ஜாதி நாட்டு மாட்டு ரகமான இந்த காளையின் உயிரணுவுக்கு மிகுந்த டிமான்ட் இருப்பதால் ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் உயிரணு விற்பனை மூலம் மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.25 லட்சம் வரை வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... எனவே இந்த காளைக்கு மிகுந்த தேவை இருப்பதால் விலையும் அதிகமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். பொதுவாக மாடுகள் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தான் விலை போகும். தற்போது ரூ.1 கோடிக்கு காளை விற்பனையான சம்பவம் விவசாயிகள் மத்தியில் ஆச்சரியமாக பகிரப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


