Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மிகவும் பழமையானது

பூமியில் உயிர்கள் எப்போது தோன்றியது என்பதைக் கண்டறிய உதவும் 160 கோடி ஆண்டு பழமையான தாவரப் படிமம் ஒன்று கிடைத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் என்ற படிமங்கள் நிறைந்த பகுதியில் உள்ள பாறையில் உலகின் மிகப் பழைமையான இந்த தாவர படிமத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புதையல் புதிது

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியானிங் மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புராதனப்பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன், சீன ஹன் மன்னராட்சியின் வெண்கல காலத்தினை சேர்ந்த பானைகள், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வியக்க வைத்த தமிழன்

கி.மு 1010ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தஞ்சாவூர் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளை நன்றாக உற்றுநோக்கினால், அதில் ஐரோப்பிய உருவத் தோற்றமுடைய ஒருவரின் சிலை உள்ளது தெரியும். அந்த ஐரோப்பியர் யார் என்று தற்போது ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அவர் பிரான்ஸ் மன்னர் இரண்டாம் ராபர்ட். அவரது காலமும் கி.மு 10-ம் நூற்றாண்டுகள்தான். 1500ம் ஆண்டில் தான் வாஸ்கோடாகாமா உலகை சுற்றிவந்தார். அதுதான் உலகை ஒன்றிணைக்க முயற்சித்த முதல் நடவடிக்கை என்று எண்ணப்பட்ட நேரத்தில், தமிழன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே உலகத்தோடு தொடர்பு கொண்டு வாணிபம் செய்துவந்தது தெரியவந்தது. இதனாலேயே பிரான்ஸ் மன்னர்களின் சிலையை உலகின் சிறப்புவாய்ந்த கோயிலில் வடிவமைத்து வைத்துள்ளான் சோழப்பெருமகன்.

துரித உணவுகள்

துரித உணவுகளை இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். துரித உணவுகளில் இருக்கும் மைதா, சீஸ், சமையல் சோடா போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, உடலுக்கு அதிக கலோரியைக் கொடுத்து, பசியை அடக்கி, நீண்ட நேரத்துக்குப் பசிஉணர்வே ஏற்படாமல் செய்யும்.

பீட்சா எப்படி வந்தது

இன்று உலகையே ஆக்கிரமித்திருக்கும் பீட்சாவின் கதை தெரியுமா.. 1889ம் ஆண்டில், அப்போதைய இத்தாலி ராணியான மார்கரிட்டா மற்றும் ராஜாவான முதலாம் ராக் உம்பர்டோ ஆகியோர் நேப்பிள் பகுதியில் நகர்வலம் சென்றனர். அப்போது, அந்நகர ஏழைகள் விரும்பி சாப்பிட்டு வந்த தட்டை ரொட்டியை, ராணி சுவைத்து பார்த்தார். உடனே, தட்டை ரொட்டியின் ருசிக்கு மயங்கிய ராணி அதன் ரசிகையாகவே மாறிவிட்டார். உடனே தனது அரண்மனை சமையல்காரரை அழைத்து‘எனக்கு தட்டை ரொட்டியை தயார் செய்து தா’ என்று உத்தரவிட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று காத்திருந்த அரண்மனை சமையல்காரர் ரஃபேல் எஸ்போசிடா, தட்டை ரொட்டிக்கு புதிய பரிமாணம் அளித்தார். அதில், இத்தாலிய சிகப்பு தக்காளி, சீஸ், துளசி இலைகள் போன்றவற்றை ஒரு அளவான விகிதத்தில் சேர்த்து ராணியிடம் கொடுத்தார். அவர் தயாரித்த தட்டை ரொட்டியில், இத்தாலிய தேசிய கொடியின் வண்ணங்களான சிவப்பு (தக்காளி), வெள்ளை, பச்சை இருக்கும்படி பார்த்து கொண்டார். இன்று, நம்மிடையே பிரபலமாக உள்ள மார்கரிட்டா பீட்சா என்ற ரகம் தோன்றியது இப்படித்தான். பின்னர் 2 ஆம் உலகப் போரின் போது ராணுவ வீரர்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி பீட்சா பல்வேறு வடிவங்களை எடுத்தது என்பது நீண்ட வரலாறு.

100-வது பிறந்த நாள்

பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின். இவர்களுக்கு நாளையுடன் 100 வயது ஆகிறது. தங்களது பிறந்த நாளை பெரிய விருந்துடன் அமர்க்களமாக கொண்டாட நினைத்த இச்சகோதரிகள் விழாவுக்கு 100 பேரை அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago