ஸ்மார்ட்போனில் சார்ஜ் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஒருசில வினாடிகளில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. 'பிளக்சிபிள் சூப்பர் கெபாசிட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப த்தைப் பயன்படுத்தி ஒருசில வினாடிகளில் அதை சார்ஜ் செய்து விடலாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இணையதளத்தில் தகவலை தேட வேண்டுமென்றால் குரல்வழி மூலம் கூகுள் தேடுபொறியில் தேடலாம். குரல்வழி தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளை கூகுள் சேர்த்துள்ளது.
கண்கள் சோர்வாக இருந்தால், பார்ப்பதில் சிரமத்தை உணரக்கூடும். கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ, சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வளிக்க வேண்டும். மேலும், நீர் வடிந்தால் கண்கள் சோர்வடைந்துள்ளது என அர்த்தம்.
அமெரிக்கா என்றாலே எல்லோருக்கும் வானளாவிய கட்டிடங்கள், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகள், செழிப்பு மிக்க நாடு என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் அங்கும் கூட சற்று கூட வளர்ச்சியடையாத கிராமம் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... நம்பித்தான் ஆக வேண்டும். அரிசோனா மாகாணத்தில் கிராண்ட் கேன்யோன் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள சுபாய் என்ற கிராமம்தான் இன்னும் வளர்ச்சியடையாத கிராமம். வளர்ச்சியடையாத என்றால் அந்த கிராமத்துக்கு சாலை வசதி, ரயில் போக்குவரத்து வசதி கூட கிடையாது. சுமார் 300 பேர் மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்துக்கு நடந்தோ அல்லது 2 பேர் செல்லக் கூடிய சிறிய விமானத்திலோதான் செல்ல முடியும். அங்கு முழுக்க முழுக்க அமெரிக்காவின் அசலான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இருந்த போதிலும் அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் 2 சர்ச்சுகள், விடுதிகள், ஆரம்ப பள்ளிகள், பலசரக்கு கடை மற்றும் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள மக்கள் ஹவாசுபாய் மொழியை பேசுகின்றனர். விவசாயம்தான் பிரதான தொழில். விவசாய பணிகளை கழுதை அல்லது குதிரையை வைத்து மேற்கொள்கின்றனர். விவசாய பொருள்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த அதிசய கிராமத்தை பார்வையிட வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காகத்தான் அங்கு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்கு பழங்குடியின பாதுகாப்பு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது கூடுதல் தகவல். அமெரிக்கா என்பது ஒரு கனவுதான் என்பது இப்போதாவது புரிந்தால் சரி..
நியூசிலாந்து விஞ்ஞானிகள் ஆழ்கடலில் வாழும் ஒரு அரிய வகை பேய் சுறா மீனை கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் சிறிய மீன்வகை என்றும், ஆழ் கடலில் நிழலான பகுதிகளில் வாழக்கூடியது என்றும் தெரிவித்துள்ளனர். இதை தென் தீவுக்கு அருகே, சுமார் 1.2 கி.மீ. ஆழ்கடலில் கண்டுபிடித்து உள்ளனர், என்று தெரிவித்துள்ளனர். இந்த பேய் சுறா மீன்கள் - சிமேரா என்றும் அழைக்கப்படும் என்றும், இது மிகவும் அரிதாகவே காணப்படும், அதிலும் அவற்றின் குட்டிகளை பார்ப்பது இன்னும் அரிதானது. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள இந்த பேய் சுறா மீன் இளம் பருவ நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த வகையான மீன் குட்டிகளின் இளம் பருவ நிலையை பற்றி அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
19 ஆம் நூற்றாண்டு வரை தமிழின் எந்த இலக்கிய ஆவணத்திலும் தீபாவளி என்ற சொல் கிடையாது. வட நாட்டில் இருந்தும், விஜயநகர பேரரசின் போதும் தமிழகத்துக்கு தீபாவளி வந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தீபாவளியை இந்துக்கள் தவிர சமணர்கள், புத்தர்கள் மற்றும் சில வெளிநாடுகளிலும் கொண்டாடுகின்றனர்.1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் - தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. பழங்காலத்தில் தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தீபாவளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். எது எப்படியோ இன்றைக்கு தீபாவளிக்கு புத்தாடை புனைந்து, பலகாரங்கள் செய்து, புதுப்படம் ரீலிஸ் செய்தால்தான் தமிழனின் தீபாவளி நிறைவு பெறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


