முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாலிபரின் அசூர வளர்ச்சி

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராவ் என்ற 24 வயது வாலிபர் சிறுவயது முதலே உயரமாக வளரத் தொடங்கினார். இதனால் அவரது வளர்ச்சி தொடர்பாக பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீங்கள் உயரமாக இருப்பதால் மகனும் உயரமாக வளரலாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறினர். இப்போது 24 வயதான நிலையில் சண்முகராவ் 8 அடி 3 அங்குலம் வளர்ந்து விட்டார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகிறார். இதனால் அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். சண்முகராவ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். பள்ளியில் அவரை எல்லோரும் ஏணி என்று கேலி செய்தனர். இதனால் அவர் படிப்பை நிறுத்திக் கொண்டார்.

புதிய கிரகம்

விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே தற்போது புதிதாக ஒரு கோள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கிரகத்தை ஜெர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகங்களில் வளிமண்டலம் எதுவும் இல்லை. ஆனால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. இக்கிரகம் பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 39 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்த ஆய்வு நடைப்பெற்று வருகிறது.

சளி பிரச்சினைக்கு...

நெஞ்சில்  சளிக்கட்டிக்கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து அடிக்கடி இருமி வயிற்று வலி ஏற்படுவர்களுக்கும் ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும். மேலும், சளியின் தாக்கம் குறையும். ஆனால் அதிகம் சேர்க்க கூடாது.

ரூ. 714 கோடியாம்

மறைந்த ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த அந்த ஓவியம், நியூயார்க்கில் பிரபல ஏல நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு மண்டையோடு வடிவத்தைக் கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. இந்த ஓவியம், 110.5 மில்லியன் டாலர் களுக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 714 கோடி ரூபாய். இதை ஜப்பானைச் சேர்ந்த தொழில்முனைவர் வாங்கியுள்ளார். ஓவியர் ஷான் மிஷெலின் முந்தைய ஓவியத்தைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. தற்போது ஓவியத்தை ஏலத்தில் எடுத்தவர்தான் ஓர் ஆண்டுக்குமுன், ஷான் மிஷெலின் அந்த ஓவியத்தையும் விலைக்கு வாங்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போனதாம்.

பயம் வேண்டாம்

நம்முடைய மார்பின் ஒரு பக்கம் மட்டும் வலியை உணர்ந்தால் இது இருதய சம்பந்தமான நோய் என்று பயப்படவேண்டாம்.  அதற்கு எலும்பு முறிவு, குருத்தெலும்பு அழற்சி, வைரஸ் தொற்றுகள், மார்பு தசைகளுக்கு கொடுக்கப்படும் கஷ்டம், அதிகப்படியான அமில சுரப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

புதிய நட்சத்திர கூட்டம்

சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் மடங்கு அதிக அடர்த்தி கொண்ட புதிய நட்சத்திர கூட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திர கூட்டம் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், இது பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திர கூட்டத்தில் 42 குழுக்களாக பத்தாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதனை இந்தியாவின் புனேவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டிறிந்து, இதற்கு சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர். இதுவே நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர கூட்டத்திலேயே மிகப் பெரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago