முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பீர்க்கங்காய் மகத்துவம்

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.சொறி, சிரங்கு, புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, அந்த இடங்களில் வைத்துக் கட்டினால் குணமாகிவிடும்.  தோல் நோயாளிகள் இதை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைவாக குணமாகும்.

டிவியில் தெரியும் உணவின் சுவையை நாவால் வருடி உணரும் புதிய ஸ்கிரீன்

தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நாவால் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியாஷிடா என்பவர்தான் இந்த கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். இதன் மூலம் டிவியில் தோன்றும் உணவு பொருள்களின் சுவையை டிவியின் மீது ஒட்டப்பட்டுள்ள ஒரு வகை பிலிம் மூலம் கண்டு பிடிக்க முடியும். அதை நாவால் வருடுவதன் மூலம் டிவியில் தோன்றும் உணவுப் பொருளின் சுவை தெரியும் என்கிறார். இதை தயாரிக்க இந்திய மதிப்பில் ரூ.65 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார். இதன் மூலம் தொலைவில் செய்யப்படும் டிஷ்களின் டேஸ்டை நம் டிவிலேயே நாவால் ருசிக்கலாம் என்றால் ஆச்சரியம் தானே..

மூட்டை பூச்சிகளை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

இரவில் நமது தூக்கத்தை கெடுத்து கடும் எரிச்சலையும் மன உளைச்சலையும் கொடுப்பதுடன் நமது ரத்தத்தையும் பதம் பார்ப்பவை மூட்டை பூச்சிகள். இன்றை கால கட்டத்தில் நகர்ப்புறங்களில் மூட்டை பூச்சிகள் அருகிவிட்டாலும் (அதற்கு பதிலாக கொசுக்கள்) ஊரக பகுதிகளில் ஜாம் ஜாம் என்று வாழ்க்கை நடத்தியே வருகின்றன. இவை பூமி பந்தில் நெடுங்காலமாக உயிர்த்திருக்கும் ஜீவராசி என்றால் ஆச்சரியம் தானே... அதாவது மூட்டை பூச்சிகள் டினோசர்கள் வாழ்ந்த கால கட்டம் முதல் இந்த பூமியில் இருந்து வருகின்றனவாம்... அதாவது 115 மில்லியன் ஆண்டுகளாக வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்க்க சாதாரணமாக நமது படுக்கைகளில் காணப்படும் மூட்டை பூச்்சிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது என்கிறது விலங்கியல் பரிணாமவியல்... என்ன சரிதானே.

ஒளிரும் அழகிய தோல் கொண்ட மிகவும் ஆபத்தான அம்புத் தவளை

நச்சு அம்புத் தவளைகள் (Poison dart frog) இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும். எதிரி விலங்குகளை தாக்கும் ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய விஷத்தினை தன் முதுகுப்பகுதியில் சுரக்குமாம். இது எதிரிகளை எச்சரிக்கை விடுத்துத் தாக்க பயன்படும் ஒரு கருவி. தவளை சுரக்கும் கொடிய விஷம் கிட்டத்தட்ட 10 மனிதர்களைக் கொல்லக்கூடியதாம். மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் இந்த தவளைகள் நச்சு அம்பு தவளைகள் என அழைக்கப்படுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் 220 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மேல் தோலில் அம்புகளை தடவி வேட்டையாட உபயோகித்தனர். இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும். இந்த நிறம் ஒரு எச்சரிக்கை அடையாளம். மேல் தோலில் உள்ள விஷம் 20,000 எலிகளையும், 10 மனிதர்களையும் கொள்ள கூடியது. அழகென்றாலே ஆபத்து என்பதற்கு மிக சிறந்த உதாரணம் இந்த நச்சு அம்பு தவளைகள் தாம்.

உலகிலேயே மிகவும் தடிமனாக வளரும் மரம் எது தெரியுமா?

மரங்கள் பெரிதாகவும், உயரமாகவும் வளரும் என்பது நாம் நன்கு அறிந்ததே. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் மரம் ஒன்று 435 அடி உயரம் வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல கலிபோர்னியாவில் செம்மரம் ஒன்று 379 அடி உயரம் வளர்ந்திருந்தது. ஆனால் தடிமன் என்ற அளவில் ஆப்பிரிக்காவில் உள்ள போபாப் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள செகோயா மரங்களும்தான் மிக பெரிதானவை. இவற்றின் பருமனை பற்றி கேட்டால் அதில் ஒரு வீடு, அல்லது ஒரு அபார்ட்மென்டே கட்டிவிடலாம் என்றால் கற்பனை செய்து பார்த்து கொள்ளுங்கள்.

உலகிலேயே அதிக விலைக்கு விற்ற புத்தகம் எது தெரியுமா?

இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போனால் புத்தக விலைகளை கேட்டால் மயங்கி விழாத குறையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலைகள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதில் பதிப்பாளர்களை குற்றம் சொல்லியும் பயன்இல்லை. புத்தகத்துக்கு தேவையான காகித விலை, மை, அச்சடிக்கும் செலவு எல்லாம் அதிகரிக்கும் போது புத்தக விலையும் கூடத்தானே செய்யும். அது கிடக்கட்டும். உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான புத்தகம் எது தெரியுமா... லியோனார்டோ டாவின்சியால் எழுதப்பட்ட கோடெக்ஸ் லெயிஸ்டர் என்ற புத்தகம்தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அந்த புத்தகத்தை வாங்கியவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ். விலை எவ்வளவு தெரியுமா 30.8 மில்லியன் டாலர். அவர் அந்த பணத்தை வெறும் 1 மணி நேரத்தில் ஈட்டி விடுவார் என்றால் அது அதை விட சுவாரசியம் தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்