முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

களையெடுக்கும் ரோபோ

தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புதிய வசதி

சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் 2 பில்லியன் வாடிக்கையாளர்களை எட்டவுள்ளது. இந்தநிலையில் தற்போது மெஜஞ்சர் டே எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அடுத்ததாக தாம் செய்யவிருக்கும் விடயங்களை நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பரிமாறிக்கொள்ள முடியும்.

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

வந்திருச்சு புதுசு

எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.

மூட்டை பூச்சிகளை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

இரவில் நமது தூக்கத்தை கெடுத்து கடும் எரிச்சலையும் மன உளைச்சலையும் கொடுப்பதுடன் நமது ரத்தத்தையும் பதம் பார்ப்பவை மூட்டை பூச்சிகள். இன்றை கால கட்டத்தில் நகர்ப்புறங்களில் மூட்டை பூச்சிகள் அருகிவிட்டாலும் (அதற்கு பதிலாக கொசுக்கள்) ஊரக பகுதிகளில் ஜாம் ஜாம் என்று வாழ்க்கை நடத்தியே வருகின்றன. இவை பூமி பந்தில் நெடுங்காலமாக உயிர்த்திருக்கும் ஜீவராசி என்றால் ஆச்சரியம் தானே... அதாவது மூட்டை பூச்சிகள் டினோசர்கள் வாழ்ந்த கால கட்டம் முதல் இந்த பூமியில் இருந்து வருகின்றனவாம்... அதாவது 115 மில்லியன் ஆண்டுகளாக வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்க்க சாதாரணமாக நமது படுக்கைகளில் காணப்படும் மூட்டை பூச்்சிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது என்கிறது விலங்கியல் பரிணாமவியல்... என்ன சரிதானே.

தேநீர்தான் உணவு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் உண்ண உணவு கிடைக்காமல், வெறும் க‌றுப்புத் தேநீரை (பிளாக் டி)மட்டுமே பருகி உயிர்வாழ வேண்டிய நிலை அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.  பால் வழங்கிக் கொண்டிருந்த ஆடுகளும், மாடுகளும் வறட்சியால் இறந்துபோய் விட்டதால் இந்த நிலைமைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்