முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்த உயிரிக்கு ஆக்சிஸன் வேண்டாம்

விஞ்ஞானத்தில் எப்போதும் புதுமைகள் சாத்தியம் தான். அண்மையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள உயிரினம் ஆக்சிஸன் அதாவது பிராண வாயு இல்லாமலேயே உயிர் வாழக்கூடியது. இது அறிவியலில் அதிசயம். சால்மன் மீன்களின் தசையில் வாழக்கூடிய உயிரினம் இது. 10 உயிரணுக்களுக்கும் குறைவாகக் கொண்ட இந்த ஒட்டுண்ணிக்கு ஹென்னிகுயா சால்மினிகோலா என்று பெயரிடப்பட்டுள்ளது.ஜெல்லிமீன் மற்றும் பவளப்பாறை இனத்தை சேர்ந்த உயிரினமாக இந்த ஒட்டுண்ணி கருதப்படுகிறது. இவை பிராணவாயுவை உள்வாங்குவதும் இல்லை, மூச்சுவிடுவதும் இல்லை. பரிணாம வளர்ச்சியில் புதிய திசையை காட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் வியக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து நாமும் வியப்போம்.. என்ன ஓகேவா..

நிலா பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்கிறதாம்

பூமி சூரியனை சுற்றுவது போல, நிலா பூமியை சுற்றி வருகிறது என்பது அனைவருக்கும் அறிந்த விசயம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத விசயம் என்னவென்றால், நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறதாம்... இதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த விலகல் ஒவ்வொரு ஆண்டும் 1.48 அங்குலம் அளவுக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது நமது நகங்கள் வளரும் வேகத்துக்கு இணையாக. அதே போல தொடக்கத்தில், அதாவது நிலா தோன்றிய போது பூமிக்கு மிக அருகில் இருந்துச்சாம்.. அதாவது அப்போது வெறும் 14 ஆயிரம் மைல் தொலைவில். தற்போது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவு 2 லட்சத்து 50 ஆயிரம் மைல். இன்னும் சில லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் நிலவை காட்டி சோறூட்ட முடியாது, காதலர்கள் நிலவை உதாரணம் காட்டி பாட முடியாது என்றால் ஆச்சரியம் தானே.

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 சத்துக் குறைபாடு, தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு காரணம். மேலும், பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. பரம்பரையின் காரணமாகவும் நரை ஏற்படுவது உண்டு.

காதலிக்காக பீச்சில் நிரப்புவதற்காக மணலை வாங்கியவர் யார் தெரியுமா?

யாரும் இதுவரை பார்க்காத போதிலும் உலக அழகி கிளியோபாட்ரா என்பது வழக்கமாக சொல்லப்படும் விசயம். ஆனால் அதே நேரத்தில் அவள் மிகவும் ஆற்றல் மிக்க பேரரசியாக விளங்கினாள். அவளது காதலன் மார்க் ஆண்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தனது காதலி கிளியோபாட்ராவை மகிழ்விப்பதற்காக எகிப்திலிருந்து மணலை வரவழைத்தான். எதற்கு தெரியுமா துருக்கியில் உள்ள செடிர் தீவில் உள்ள பீச்சை மணலால் நிரப்பி காதலியை மகிழ்விப்பதற்காக. தற்போதும் செடிர் தீவு கிளியோபாட்ரா தீவு என்றே அழைக்கப்படுகிறது. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... அதிலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு காதல் தோன்றினால் என்னவெல்லாம் நடக்கும் பாருங்கள்.

உலகிலேயே அதிக காஸ்ட்லியான நகரம் எது தெரியுமா?

உலகிலேயே அதிக காஸ்ட்லியான நகரம் எது தெரியுமா.. நீங்கள் கற்பனை செய்வது போல அமெரிக்காவில் உள்ள நியூயார்க் அல்லது வாஷிங்டன், சவுதி அரேபியாவில் உள்ள துபாய், ரியாத் என்று கற்பனை குதிரையை தட்டி விட்டீர்கள் என்றால் அதை கொஞ்சம் நிறுத்துங்கள். இது முற்றிலும் யாரும் எதிர்பாராத ஒன்றாகும். உலகிலேயே அதிக காஸ்ட்லியான நகரம் இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் தான். ஆகஸ்ட் -செப்டம்பர் நிலவரப்படி உலகில் காஸ்ட்லியான நகரங்கள் என பட்டியலிடப்பட்ட 173 நகரங்களில் டெல் அவிவ் தான் முதலிடம் பிடித்துள்ளது. பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. ஜூரிச் 4 ஆவது நகரம், ஹாங்காங் 5 ஆவது இடம். நியூயார்க் நகரத்துக்கு 6 ஆவது இடம் தான் கிடைத்துள்ளது. ஜெனீவா 7, கோபன்ஹேகன்8, லாஸ் ஏஞ்சல்ஸ்9 ஓசாகா 10 என பட்டியலில் இடம் பிடித்துள்ளன. கடந்தாண்டு பாரீஸ், ஜூரிச், ஹாங்காங் ஆகியவை பட்டியலில் முன்னணியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

துரித உணவுகள்

துரித உணவுகளை இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். துரித உணவுகளில் இருக்கும் மைதா, சீஸ், சமையல் சோடா போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, உடலுக்கு அதிக கலோரியைக் கொடுத்து, பசியை அடக்கி, நீண்ட நேரத்துக்குப் பசிஉணர்வே ஏற்படாமல் செய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்