முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாட்ஸ் அப்பிலும்...

முன்பு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நொவ்கட் மாடலில் மட்டும் செயல்படக்கூடிய யுனிகோடு 9 எனும் மென்பொருளானது தற்போது ஆண்ட்ராய்டின் அனைத்து வெர்ஷனிலும் அப்டேட் ஆகியுள்ளது. அதனால் பீட்டா எமொஜிகளான பட்டாம்பூச்சி, தரையில் சிரித்து உருளும் முகம், கோமாளி முகம், வானவில்  என பல புதிய எமொஜிகள் வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

நெல்சன் மண்டேலா

குத்துச்சண்டை வீரராக அறியப் பெற்ற நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆவார். மேலும் தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் இவர். இவரது உண்மையான பெயர் நெல்சன் மண்டேலா இல்லை. இவரது இயற்பெயர் ரோபிசலா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன், இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரால் சூட்டப்பட்டதாம். மண்டேலா சிறையில் சுமார் 27 ஆண்டுகள் இருந்தார். உலக வரலாற்றிலேயே சிறையில் நீண்ட காலம் கழித்த தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் இவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு வந்தார்.

முதல் ஏ.டி.எம்

50 ஆண்டுகள் ஆன, ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பார்க்லேஸ் வங்கி இந்த முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது.  ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.

அமிர்தம் போன்ற சுவை

இந்து மதத்தில் சிவ பெருமானை துதிக்கும் பக்தர்கள் சைவர்கள் என்றும் திருமாலை தொழுபவர்கள் வைணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். வைணர்கள் தங்களது இஷ்ட தெய்வமான மதுரை கள்ளழகர் போன்ற தெய்வங்கள் திரு உலா வரும் போது அவர்களை வரவேற்கும் விதமாக அக்கார வடிசல் என்ற ஒரு இனிமையான பிரசாத்தை உருவாக்குவார்கள். தூய தமிழில் அக்காரம் என்பது இனிப்பை குறிக்கும் வெல்லத்திற்கான பெயராகும். இந்த வெல்லத்தை பயன்படுத்தி தயாரிக்கும் அக்கார வடிசல் பிரசாதம், நெய், முந்திரி, திராட்சை போட்டு நன்றாக குழையும் வகையில் அரிசியை தண்ணீருக்கு பதிலாக பாலை சுண்ட காய்ச்சி அதில் போட்டு குழைவாக வடிப்பார்கள். இந்த அக்கார வடிசல் சுவை அமிர்தமாக இருக்கும்.

கணிணியில் பயன்படுத்தப்படும் மவுஸ் தொடக்கத்தில் மரத்தில் செய்யப்பட்டது

சில நேரங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் வரலாறு குறித்து தெரியவந்தால் அதில் நாம் அறிந்திராத பல்வேறு சுவாரசியமான செய்திகள் அடங்கியிருக்கும். அதில் ஒன்று, தற்போது நாம் கணிணியில் பயன்படுத்தி வரும் மவுஸ். 1964 இல் ஸ்டான்போர்ட் பொறியாளர் டக்ளஸ் ஏங்கல்பார்ட் என்பவர்தான் மர மவுஸை உருவாக்கியவர். அதில் இரண்டு சக்கரங்கள் மற்றும் ஒரு பொத்தான் கொண்ட மரப்பெட்டி வடிவத்தில் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே.. 

தட்டான்கள் இருக்கும் இடத்தில் கொசு இருக்காது ஏன் தெரியுமா?

டிராகன்ஃபிளைஸ்(Dragonflies) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டான், தட்டாரப்பூச்சி எனவும், தும்பி எனவும், தட்டாம்பூச்சி எனவும் அழைப்பார்கள். தட்டான் பூச்சிகள் மிக வேகமாக லாவகமாக பறக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவாக பறக்க கூடியவை. இவை ஒரு ஆண்டில் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கக் கூடியது. ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 503 தட்டான் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தட்டான் பூச்சிகள் ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் ஒரு உயிரினம். டினோசர்களை விட மிகவும் பழமையானவை. தட்டான்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. அவைகள் சூடான காலநிலை மற்றும் தண்ணீருக்கு அருகில் வாழ விரும்புகின்றன. தட்டான் பூச்சிகள் கொசுக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் தொல்லை குறைவாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago