முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தூக்கம் வர

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு டிப்ஸ். உறங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழமும், வெதுவெதுப்பான பாலும் சாப்பிடுவது நல்ல உறக்கத்தை தரும், காரணம் உறக்கதிற்கான ஹார்மோன் மெலடோனின் மூலம் சிறந்து செயல்படுகிறது. மேலும், பாலில் இருக்கும் டிரிப்டோபென் ஆழ்ந்த உறக்கத்தை நமக்கு தருகிறது.

எந்த மிருகத்தை மனிதனால் பழக்க முடியாது தெரியுமா?

மனிதர்கள் பல்வேறு விலங்குகளையும் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கின்றனர். ஒரு சிலர் சர்க்கஸ் போன்ற இடங்களில் சிங்கம், புலி, கரடி, யானைகளை கூட நம் சொல் கேட்கும்படி வளர்த்து விடுகின்றனர். ஆனால் ஒரே ஒரு விலங்கு மட்டும் விதிவிலக்கு. அது ஹைனா எனப்படும் கழுதைப்புலி தான் அது. கழுதைப்புலியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். எளிதில் கழுதைப்புலிகளுடன் பழகி அவற்றை நம் பேச்சை கேட்க வைக்க முடியாது. இவற்றை பராமரிப்பதற்கு அதிக செலவாகும். அமெரிக்காவில் கழுதைப்புலியை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம். அதையும் மீறி நாம் நம்முடைய வீட்டில் வளர்த்தால் பக்கத்து வீட்டுக்காரங்களை பதம்பார்த்து விடும். மொத்தத்தில் கழுதைப்புலியை வீட்டில் வளர்ப்பது மிகவும் அபாயகரமானது.

மாற்று வழி

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள், 2030-இல் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும். 2030-இல் எரிசக்திப் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் கருதியும், பெட்ரோல் புழக்கமே அரிதாகிவிடுமாம். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும் என்றும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதான் காரணம்

மங்கோலியத் தலைவர் செங்கிஸ்கான் பேரன் குப்ளேகான். அவர் கி.பி. 1286-இல் சீனப் பேரரசனானார். சீனர்களை தான் அடிமைப்படுத்தியதன் அடையாளமாக, அவர்கள் தங்கள் தலைமுடியைப் பின்னலிடும்படி ஆணையிட்டார். அதனால்தான் சீனர்கள் ஆண்களாக இருந்தாலும் பின்னல் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

நோபல் விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்ட இந்திய தலைவர் யார் தெரியுமா?

இந்தியாவிலிருந்து ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். அதன் பிறகு சர் சி.வி.ராமன், ஹர் கோவிந்த குரானா, சுப்ரமணியன் சந்திரசேகர், அமர்த்தியா சென் வரை இந்தியர்கள் பலரும் நோபல் பரிசை வென்றுள்ளனர். இந்தியாவின் தேசப்பிதா எனப் போற்றப்படுபவரான காந்தி 5 முறை நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு விருது மறுக்கப்பட்டே வந்தது. 5-வது முறையாக 1948 இல் அவர் பரிந்துரைக்கப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு கோட்சேவால் சுட்டு கொல்லப்பட்டார். 

புதிய தகவல்

மேற்குவங்கத்தை சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தை எழுதியுள்ளார்.அவரது மற்றொரு பாடல் நமக்கு அருகாமையில் உள்ள வங்க தேசத்தின் தேசியப்பாடலாக உள்ளது. இரு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய பெருமைப்பெற்ற ஒரே உலக கவிஞர் நமது ரவீந்திர நாத் தாகூர்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்