முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டென்னிஸ்: பயஸ் - மகேஷ் ஜோடி வெற்றி

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பெய்ஜிங், அக்.8 -  சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆட வர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. மகளிர் பிரிவில், செர்பிய வீராங்கனை அனா இவானோவிக் காலிறு திக்கு முன்னேறினார். ஆடவருக்கான ஏ.டி.பி. மற்றும் மகளிருக்கான டபிள்யு. டி. ஏ. ஆகிய இரண்டு சங்கமும் இணைந்து சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சர்வதேச அளவிலான போட்டியை நடத்தி வருகின்றன. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. 

இதில் பங்கேற்று வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் போட்டி தற் போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் செர்பி ய வீராங்கனை அனா இவானோவிக்கும், ரஷ்ய இளம் வீராங்கனையான வொனரேவாவும் பலப்பரிட்சை நடத்தினர். 

இதில் செர்பியாவின் நட்சத்திர வீராங்கனையான அனா சிறப்பாக ஆடினார். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில்  அவர் 6 - 2, 6 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடியும், சீனாவின் காங்க் மற்றும் லீ இணையும் மோதின. 

3 செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் அனுபவமிக்க லியாண்டர் மற் றும் பூபதி ஜோடி அபாரமாக ஆடியது. இறுதியில் இந்த ஜோடி 6 - 2, 3 - 6, 10 - 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன் னேறியது. 

முன்னதாக நடந்த முதல் செட்டில் இந்திய ஜோடி துவக்கத்தில் இருந் தே புள்ளிகளைக் குவித்து முன்னேறியது. இறுதியில், 6 - 2 என்ற கண க்கில் செட்டை வென்றது. 

இதனைத் தொடர்ந்து நடந்த 2 -வது செட்டில் சீன இணை சுதாரித்து ஆடியது. இதனால் அந்த இணை புள்ளிகளை அடுத்தடுத்து பெற்றது. இறுதியில் 6 - 3 என்ற கணக்கில் வென்றது. அடுத்து நடந்த 3 -வது செட்டில் இந்திய ஜோடி 10 - 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago