முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ. தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தொடரை வென்றது

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா, நவ. 18 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெ ற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னி ங்ஸ் மற்றும் 15 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 - 0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத் தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் 2-வது இன்னிங்சில் பிராவோ சதம் அடித்தார். அவருடன் சாமுவேல்ஸ், சந்தர்பால், கேப்டன் சம்மி ஆகி யோர் தோல்வியைத் தவிர்க்க போராடினர்.

ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸ் போல இதிலும் சிறப்பாக செயல்பட்டு அபாரமாக பந்து வீசி மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனால் இந்தியா இன் னிங்ஸ் வெற்றி பெற்றது.  
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான உமேஷ் யாத வ் 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். ஓஜா, இஷாந்த் சர்மா மற்று ம் அஸ்வின் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர்.
இந்தியா மற்றும் மே.இ,தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 14 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபார மாக பேட்டிங் செய்து பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. இந்திய அணி இறுதியில், 151.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 631 ரன்னை எடுத்தது.   
இந்திய அணி தரப்பில், 3 வீரர்கள் சதம் அடித்தனர். வி.வி.எஸ் லக்ஷ்ம ண் 280 பந்தில் 176 ரன்னையும், டிராவிட் 207 பந்தில் 119 ரன்னையும்,கேப்டன் தோனி 175 பந்தில் 144 ரன்னையும் எடுத்தனர். தவிர, காம் பீர் 65 ரன்னையும், சேவாக் மற்றும் டெண்டுல்கர் தலா 38 ரன்னையும், யுவராஜ் சிங் 25 ரன்னையும் எடுத்தனர்.
மே.இ.தீவு அணி சார்பில், கேமர் ரோச் 106 ரன்னைக் கொடுத்து 2 விக் கெட் எடுத்தார். டேரன் சம்மி 132 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, எப். எட்வர்ட்ஸ், பிஷூ மற்றும் பிராத் வெயிட் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி இந்திய பந்து வீச் சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 48 ஓவரி ல் அனைத்து விக்கெட்டையும் இழந்து 153 ரன்னில் சுருண்டது.
பிராவோ 30 ரன்னையும், சாமுவேல்ஸ் 25 ரன்னையும், சம்மி 18 ரன் னையும், பிராத் வெயிட் 17 ரன்னையும், கே.எட்வர்ட்ஸ் மற்றும் எப். எர்வர்ட்ஸ் ஆகியோர் தலா 16 ரன்னையும் எடுத்தனர். ஓஜா 4 விக்கெ ட்டும், யாதவ் 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டதால் பா லோ ஆன் ஆனது. பின்பு 2-வது இன்னிங்சைத் துவக்கிய அந்த அணி 126.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 463 ரன்னில் ஆட்டம் இழந்தது.
இதனால் இந்திய அணி இந்த 2-வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 15 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாத னை படைத்தது.
2-வது இன்னிங்சில் பிராவோ சதம் (230 பந்தில் 136) அடித்தார். அவரு டன் சாமுவேல்ஸ் (111 பந்தில் 84 ), கேப்டன் சம்மி (32) ஆகியோர் தோல்வியைத் தவிர்க்க போராடினர். இருந்த போதிலும் இந்திய பெளலர்கள் அதை முறியடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். முன்னதாக பரத் 62 ரன்னையும், கே.எட்வர்ட்ஸ் 60 ரன்னையும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில், உமேஷ் யாதவ் 80 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். இஷாந்த் சர்மா 94 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, ஓஜா மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந் தப் போட்டியின் ஆட்டநாயகனாக வி.வி.எஸ். லக்ஷ்மண் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்