முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை மருத்துவ மனையில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.18 - கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா நேற்று முன்தினம் (16.11.11) காலை 10.00 மணியளவில் சைதை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துறை அமைச்சர் ஆய்வின்போது கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீனவளத்துறை அரசுச் செயலர், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். அமைச்சர் பன்முக மருத்துவமனை, நாய் வளர்ப்புப் பிரிவு, தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை, மத்திய தொடர்பு ஆய்வுக்கூடம், உறைவிந்து வங்கி ஆகியவற்றை பார்வையிட்டு விரிவாக ஆய்வு மேற்கொண்டார். நாய் வளர்ப்புப் பிரிவிற்கென ஒதுக்கப்பட்ட ரூ.4.00 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை பார்வையிட்டு மேலும் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தினார். பன்முக மருத்துவமனையில் ரூ.7.50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு தக்க அறிவுரைகள் வழங்கினார்.
இ.சி.ஜி, எக்ஸ்-ரே யூனிட் ஆகியவற்றின் பயன்பாட்டினை ஆய்வு செய்து சிறப்பாக செயல்படுவதைக் கண்டு பாராட்டினார். இம்மருத்துவமனையில் சராசரியாக 75 முதல் 100 கால்நடைகள் தினசரி சிகிச்சைக்காக வரப்படுவதை கண்டறிந்தார். செயற்கைமுறை கருவூட்டல் பணிகளும் சிறப்பாக செயல்படுவதைக் குறிப்பிட்ட அமைச்சர், துறை வளர்ச்சிக்காக பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். கால்நடை மருத்துவத்தில் ஏற்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்து கால்நடை  விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார். சைதை, பன்முக மருத்துவமனை வளாகத்தில் துறை தொடர்பான அனைத்து பணிகளும் செவ்வனே நடைபெறவும், மருத்துவமனையின் சேவை கால்நடை வளர்ப்போருக்கு சீரிய முறையில் சென்றடைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் துறை பணிகள் சிறப்பாக செயல்படுவதற்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.
இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago