முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானிலும் சோனியா மருமகன் ராபர்ட் வதோராவுக்கு 100 ஏக்கர் நிலம்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. - 9 - ராபர்ட் வதோரா ராஜஸ்தானிலும் 100 ஏக்கர் நிலம் வாங்கி போட்டிருப்பதற் கான ஆதாரம் வெளியாகியுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு -  சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதோரா மீது ஊழல் ஒழிப்புத் துறைத் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அடுக் கடுக்கான குற்றச்சாட்டை சுமத்தினார்.  அரியானாவில் அவர் ஏகப்பட்ட நிலத் தை வாங்கியதாக குறிப்பிட்டு இருந் தார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.  ஆகவே காங்கிரஸ் அரசு அவருக்கு ஆத ரவாக செயல்பட்டது என்றும் குறிப்பி ட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது.  இப்படிப்பட்ட நிலையில் அவர் ராஜஸ் தான் மாநிலத்திலும், 100 ஏக்கர் நிலம் வாங்கியதாக தகவல் வெளியானது. அந்த மாநிலத்தில் பைக்கானா என்ற நக ரம் உள்ளது.  அங்கு பல தொழிற்சாலைகள் உருவா கிவருகின்றன. ஆகவே பல்வேறு கம்பெனிகளும் போட்டி போட்டு நிலங்களை வாங்கி வருகின்றன.  அந்த வகையில் 3,000 ஏக்கர் நிலத்தை கம்பெனிகள் வாங்கியுள்ளன. ராபர்ட் வதோராவும் 100 ஏக்கர் நிலத்தை வாங் கியுள்ளார்.  ரியல் எர்த் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் 2 நிலங்கள் வாங்க ப்பட்டு உள்ளன. இந்தக் கம்பெனிக்கு ராபர்ட் வதோரா தான் சொந்தக்காரர். ஓரிடத்தில் 95.20 ஏக்கர் நிலம் 91.50 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு உள்ளது. இன்னொரு இடத்தில் 4.61 ஏக்கர் நிலம் ரூ. 8.50 லட்சத்திற்கு வாங்கப்பட்டு உள்ளது.  இதற்கான ஒப்பந்தங்கள் 2007 மற்றும் 2009 ம் ஆண்டு ஆகிய கால கட்டங்களி ல் செய்யப்பட்டு உள்ளன. இதஹ்கான பணத்தை ராப்ர்ட் வதோரா ஸ்டாண்ட ர்டு சார்ட்டர்ட் வங்கி காசோலையா க கொடுத்து உள்ளார். 

அந்த இடத்திற்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் (காங்கிரஸ் ) அடிக்கடி சென்று வந்ததாகவும் கூறப் படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்