எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.19 - தமிழ் நாட்டில் 1,000 ஏக்கர் பரப்புக்கு மேல் உள்ள 100 ஏரிகளில் முதற்கட்டமாக 25 ஏரிகளை ரூ.25 கோடியில் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் சட்டசபையில் தெரிவித்தார். பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீது பதில் அளித்து அவர் பேசியதாவது:-
ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள 100 பெரிய ஏரிகளைத் தூர்வாரி கரைகளைப் புனரமைக்க திட்டம் முதலமைச்சர் ஒப்புதலோடு கீழ்க்கண்ட புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரியினை தூர்வாரி கொள்ளளவினை அதிகரித்து சென்னை மாநகர குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டம்:
ரூபாய்40.00 கோடி மதிப்பீட்டில் கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை தூர்வாரி, 1465 மி.கனஅடியாக முழு கொள்திறன் மீளக் கொணர்ந்து, வழங்கு கால்வாயான வடவார் கால்வாயை புனரமைத்து நீர் கடத்தும் திறனை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதுடன் பாசனமும் மேம்படும்.
ஈரோடு மாவட்டம் மற்றும் வட்டம் காளிங்கராயன் வாய்க்காலின் மைல் 3.3.000 வரை புனரமைக்கும் திட்டம்:
ரூபாய் 50.00 கோடி மதிப்பீட்டில் ஈராடு மாவட்டம் மற்றும் வட்டம், காளிங்கராயன் கால்வாயின் மைல் 3/3 முதல் மைல் 9/7 வரை சீரமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இக்கால்வாயின் மைல் 3.3 வரை ரூபாய் 40.00 கோடி மதிப்பீட்டில், சுமார் 15743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் 1000 ஏக்கருக்கு மேல் பாசனப் பரப்பு உள்ள 100 ஏரிகள் உள்ளன. முதற்கட்டமாக இவ்வாண்டு 1000 ஏக்கருக்கு மேல் பாசனப் பரப்பு உள்ள 25 ஏரிகளை ரூபாய் 25.00 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி புனரமைத்து, அதன் கொள்ளளவினை மீளப் பெறுவதற்கான பணிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி மேற்கொள்ளப்படும்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், வடவாறு நீட்டிப்புக் கால்வாயை புனரமைக்கும் திட்டம்:
முதல்வரின் ஆணையின்படி, தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் வடவார் நீட்டிப்பு கால்வாயின் கரைகள், குறுக்குக் கட்டுமானங்களான மதகுகள், ட்ராப்கள், சைபன்கள் மற்றும் நடை பாலங்கள் ஆகியவை ரூபாய் 23.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதனால் 15176 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி உறுதி செய்யப்படும்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சேத்தியாதோப்பு அணைக்கட்டை புனரமைத்தல்:
முதல்வரின்ஆணைக்கிணங்க, கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், வெள்ளாற்றின் குறுக்கே உள்ள சேத்தியாதோப்பு அணைக்கட்டினை ரூபாய் 19.70 கோடி மதிப்பீட்டில், 40669 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் உறுதிசெய்யும் வகையில், புனரமைக்கப்படும்.
திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முறையே திருவண்ணாமலை மற்றும் செஞ்சிவட்டத்தில் உள்ள நந்தன் கால்வாயை புனரமைத்து நவீனப்படுத்தும் திட்டம்:
முதல்வரின்ஆணைக்கிணங்க, திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சலார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீரனூர் அணைக்கட்டிலிருந்து பிரிந்து, திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முறையே, திருவண்ணாமலை, செஞ்சி ஆகிய வட்டங்களில் ஓடும் நந்தன் கால்வாயை ரூபாய்14.50 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்தப்படும்.
நீர்வள ஆதாரத் துறையின் பாசனம் மற்றும் அலுவலக உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்:
முதல்வரின்ஆணைக்கிணங்க , பின்வரும் பணிகள் செயலாக்கப்படும்.
அ)தலைமைப்பொறியாளர், திருச்சிராப்பள்ளி மண்டலம் அலுவலகத்திற்கு 82.5 கிலோ வாட் திறன் கொண்ட ஒரு புதிய டீசல் ஜெனரேட்டர் மற்றும் நீர்ஆய்வு நிறுவன அலுவலகத்திற்கு 40 கிலோ வாட் திறன் கொண்ட ஒரு புதிய டீசல் ஜெனரேட்டர் ரூபாய் 0.16 கோடி மதிப்பீட்டில் வாங்குதல்.
ஆ) நவீன முறையில் ஆய்வுப்பணி மேற்கொள்ள நீர்வள ஆதாரத் துறையின் திட்ட உருவாக்கப் பிரிவிற்கு டிஜிட்டல் நிலஅளவை மற்றும் டோப்போகிராபிக் கருவிகள் ரூபாய் 0.30 கோடி மதிப்பீட்டில் வாங்குதல்.
இ) காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், மேட்டுக்குப்பம் கிராமத்தினருகே வேகவதி ஆற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் ரூபாய்0.22 கோடி மதிப்பீட்டில் அமைத்தல்.
்) இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், குளத்தூர் ஏரியின் கொள்ளளவினை மேம்படுத்தும் திட்டம் ரூபாய் 0.58 கோடி மதிப்பீட்டில் செயலாக்குதல்.
முதல்வரின்ஆணைக்கிணங்க, பின்வரும் நீர்வள ஆதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயலாகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்:-
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டம், ஆமூர் ஏரி மற்றும் பூந்தமல்லி வட்டம் புதிய பங்காரு வழங்கு வாய்க்காலை ரூபாய்1.15 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல்.
வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், வளையாத்தூர் ஏரியினை ரூபாய்0.65 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வட்டம், ஆலத்தூர் அணைக்கட்டின் வரத்துக்கால்வாய் மற்றும் அதன் கீழ் உள்ள ஏரிகள் மற்றும் திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள தண்டரை அணைக்கட்டு ஆகியவற்றை ரூபாய் 1.23 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல்.
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், குனியமுத்தூர் அணைக்கட்டு மற்றும் அதன் வழங்கு வாய்க்கால் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டம் கிருஷ்ண அய்யங்கார் வாய்க்காலை ரூபாய்1.15 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், ஆண்டிப்பாளையம் அணைக்கட்டின் தெற்கு கரை மற்றும் அதன் வழங்கு வாய்க்காலை ரூபாய்0.70 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருமங்கலக்குடி கிராமத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்புச் சுவர் கட்டுதல் மற்றும் கும்பகோணம் வட்டம், சுவாமிமலை கிராமத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள படுகை அணை மற்றும் பாபநாசம் வட்டம், மேலமருத்துகுடி, நாககுடி கிராமத்தில் தலைமதகை புனரமைத்தல் ஆகிய பணிகள் ரூபாய்2.65 கோடி மதிப்பீட்டில் செயலாக்குதல்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் போலகுடி கிராமத்தில் நாட்டார் ஆற்றின் குறுக்கேயுள்ள சிறுபுலிக்ஷ்ர் ரெகுலேட்டரை ரூபாய் 1.08 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், தென்னிலக்குடி கதவணையைப் புனரமைத்தல் மற்றும் திருநகரி கால்வாய் சைபன் குழாய் கட்டுதல், தரங்கம்பாடி வட்டத்தில் வசிழடாச்சேரி கிராமத்தில் வீரச்சோழன் ஆற்றின் குறுக்கே தடுப்புச் சுவரை மறு கட்டுமானம் செய்தல் ஆகிய பணிகள் ரூபாய்2.90 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துதல்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பல்லப்பட்டி பழைய அணைக்கட்டு, கொட்டான்குளம் அணைக்கட்டு மற்றும் கொட்டான்குளம் கண்மாய் முதலியவற்றை ரூபாய்0.70 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல்.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், கோட்டையாடி கால்வாய் மற்றும் தோவாளை வட்டம் இரப்பையாறு மற்றும் சுங்கன் ஓடையின் கரையைப் பலப்படுத்தும் பணிகள் ரூபாய்3.90 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துதல்.
முதல்வரின்ஆணைக்கிணங்க, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், வெள்ளாற்றின் குறுக்கே அமைந்துள்ள பெலாந்துரை கதவணை ரூபாய்17.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதன் மூலம் 12234 ஏக்கர் நிலங்களின் பாசனம் உறுதி செய்யப்படுவதுடன் கால்வாயின் நீர் செறிவு மண்டலத்தில் உள்ள 2400 ஏக்கர் நிலம் பாசனப் பயன் பெறும்.
நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் தடுப்பணைகள் கட்டுதல்:
முதல்வரின்ஆணைக்கிணங்க, கீழ்க்காணும் கால்வாய்களில் புனரமைப்பு மற்றும் தடுப்பணைகள் கட்டும் பணிகள் ரூபாய் 34.55 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், உளுப்பக்குடி கிராமத்தில் அருவியாறு ஓடையின் குறுக்கே கசிவு நீர்க் குட்டை அமைத்தல் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், புதூர் கிராமத்தில் நங்கஞ்சியார் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுதல்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், திருமங்கலம் பிரதான கால்வாயினை புனரமைத்தல்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தின் அருகே லாவா ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கே.கே.புதூர் அருகே கிளியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் வட்டங்களில் முறையே பேரங்கிக்ஷ்ர் மற்றும் பிடாகம் அருகே பெண்ணையாற்றின் குறுக்கே நிலத்தடி தடுப்புச் சுவர் அமைத்தல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், பெல்லாரப்பள்ளி, நாச்சிகுப்பம் மற்றும் ஊத்தங்கரை வட்டம், சிங்காரப்பேட்டை பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்தல்.
தருமபுரி மாவட்டம், அர்ெ வட்டம், கம்பைநல்லூர் ஆறு மற்றும் கோவிலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்தல்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், சக்கிலிச்சிகுளம், நல்லிடைச்சேரி ஏரிகளுக்கு நீர் வழங்கும் வாய்க்காலை மேம்படுத்தல்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், முறைக்ஷ்ர் கிராமத்தின் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், பரிவிரிசரியன் மற்றும் தளவாய்புரம் கிராமத்தில் அனுமாநதி குறுக்கே தடுப்பணை அமைத்தல்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், கோம்பாடி அருகே உப்போடையின் குறுக்கே தடுப்பணை அமைத்தல்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், நாராயணக்குப்பம் அருகே பாம்பனாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், காகங்கரை ஏரிக்கு புதிதாக நீர் வழங்கு கால்வாய் அமைக்கும் திட்டம்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், காகங்கரை ஏரிக்கு குத்தூர் ஏரியிலிருந்து ஒரு புதிய வழங்கு வாய்க்கால் அமைக்கும்
திட்டம் ரூபாய்2.00 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் ஆணையின்படி செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 218.55 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் உறுதி செய்யப்படும்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் ஜாம்பவான் ஓடை கிராமத்தில் கந்தபரிச்சனார் வடிகாலில் கடைமடை ரெகுலேட்டர் அமைக்கும் திட்டம்
முதல்வரின்ஆணையின்படி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கந்தபரிச்சனார் வடிகாலில் கடல்நீர் உட்புகாமல் இருக்கும் பொருட்டு ரூபாய்3.00 கோடி மதிப்பீட்டில் ரெகுலேட்டர் அமைக்கப்படும்.
ஆறுகள், கால்வாய்களின் குறுக்கே பாலங்கள் அமைத்தல்
மக்களின் போக்குவரத்து மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை விரைவாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக, முதலமைச்சர் ஆணையின்படி, பின்வரும் 9 இடங்களில் ரூபாய்5.87 கோடி மதிப்பீட்டில் பாலங்கள் அமைக்கப்படும்.
்ரோடு மாவட்டம் மற்றும் வட்டம் குரங்கன்பள்ளம் ஓடையின் குறுக்கே மற்றும் ஊஞ்சலாறு பிரிவு கால்வாயில் பாலங்கள் அமைத்தல் மற்றும் பெருந்துறை வட்டம், கண்ணவேலம்பாளையம் மற்றும் பெரிய விலாமலை கிராமத்தின் அருகே கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தினை மறுகட்டுமானம் செய்தல்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், பொழிச்சலூரில் அடையாற்றின் குறுக்கே தரைப்பாலம்அமைத்தல்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், சோரஞ்சேரியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்தல்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் பஞ்சன்தாங்கி வழங்கு வாய்க்காலில் சிறு பாலம் மற்றும் குதிரையார் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம்அமைத்தல்.
அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், காட்டூர் கிராமத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் பழையபாடி கிராமத்தில் உப்போடை மற்றும் குலமாணிக்கம் கிராமத்தின் அருகே நந்தியார் பிரதான கால்வாய் குறுக்கே புதிய பாலங்கள் அமைத்தல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலரிப்பு தடுப்பு சுவர்களை சீரமைக்கும் பணிகள்
முதல்வரின்ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம் பூத்துறையில் கடலரிப்பு தடுப்புச் சுவர் ரூபாய்2.09 கோடி மதிப்பீட்டிலும் முள்ளுத்துறையில் எல்.எஸ். 595 மீட்டரிலிருந்து எல்.எஸ். 695 மீட்டர் வரை கடலரிப்பு தடுப்பு சுவர் பொய் 0.28 கோடி மதிப்பீட்டிலும் புனரமைக்கப்படும்.
கட்டட கட்டுமானங்கள்:
முதல்வரின்ஆணையின்படி, ரூபாய்1.32 கோடி மதிப்பீட்டில் பின்வரும் கட்டட கட்டுமானங்கள் கட்டப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில் பொதுப்பணித் துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட செயற் பொறியாளருக்கு குடியிருப்பு கட்டடம் கட்டுதல்.
திருநெல்வேலியில் 2 உதவிச் செயற் பொறியாளர் குடியிருப்புகள் கட்டுதல்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 2 உதவி பொறியாளர் குடியிருப்புகள் கட்டுதல்.
தருமபுரி மாவட்டம், அரூரில் ஒரு உதவி பொறியாளர் குடியிருப்பு கட்டுதல்.
திருப்பூர், கடலூர், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு உதவி செயற் பொறியாளர் குடியிருப்பு, ஒரு பாசன உதவியாளர் குடியிருப்பு மற்றும் இரண்டு உப கோட்ட அலுவலகங்கள் கட்டுதல்.
பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைகள் /ஆய்வு மாளிகை கட்டடங்களில் சரிய சக்தி மின் அமைப்பு நிறுவுதல்:
பொதுப்பணித்துறை பராமரித்துவரும் அனைத்து சுற்றுலா மாளிகை / ஆய்வு மாளிகைகளிலும் ரூபாய்2.50 கோடி மதிப்பீட்டில் சரிய சக்தி மின் அமைப்பு, முதல்வரின்ஆணையின்படி, அமைக்கப்படும்.
உறுப்பினர்கள் இங்கே தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் முதல்வரின்ஒப்புதலுடன் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்ற உறுதியினை அளிக்கின்றேன்.
ஆகவே வெட்டுத் தீர்மானங்களை திரும்பப் பெற்று, மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்வதோடு, தமிழக முதலமைச்சர், அவர்களின் பொற்பாதங்களில் மீண்டும் ஒருமுறை நன்றி மலர்களை சமர்ப்பித்து எனது உரையினை நிறைவு செய்கின்றேன்.
இவ்வாறு அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்
14 Dec 2025சென்னை, பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


