முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சய பாரு எழுதிய நூல்: மன்மோகன் மகள் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable


புது டெல்லி, ஏப் 16 - எனது தந்தையும், பிரதமருமான மன்மோகன்சிங் குறித்து அவரது அலுவலக ஊடக பிரிவு முன்னாள் ஆலோசகர் சஞ்சயபாரு எழுதி வெளியிட்ட நூல் உள்நோக்கம் கொண்டதும், நம்பியவர்களின் முதுகில் குத்துவது போன்ற துரோக செயலாகும் என மன்மோகன்சிங்கின் மகள் உபிந்தர்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் அலுவலக ஊடக பிரிவு ஆலோசகராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி சஞ்சய பாரு, மன்மோகன்சிங் தலைமையில் தனது பணி அனுபவங்களை தொகுத்து அண்மையில் நூலாக வெளியிட்டார். இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளன.
இந்த நிலையில் மன்மோகன்சிங்கின் மகள் உபிந்தர்சிங், செய்தியாளர்களிடம் இது குறித்து கூறுகையில்,
சஞ்சய பாருவின் நூல் மரபுகளை மீறியும் தவறான உள்நோக்கத்தையும் கொண்டுள்ளது. பிரதமரின் நம்பிக்கையை தகர்ப்பதாகவும் இருக்கிறது. கிசுகிசுக்களையும் எனது தந்தையின் கருத்துக்கள் தொடர்பான உறுதிப்படுத்தாத ஆதாரங்களையும் தொகுத்து இந்த நூலை எழுதியுள்ளார். மிகைப்படுத்தப்பட்ட அவரது செயலால் நாங்கள் மிகவும் கோபமாக இருக்கிறோம். மக்களவை தேர்தல் சமயத்தில் இப்படியொரு நூலை சஞ்சயபாரு வெளியிடுவதற்கு என்ன அவசியம்? பிரதமர் அலுவலகத்திற்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்