முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவுடன் பேச்சுக்கு தயார்: தென்கொரியா அதிபர்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

சியோல், செப்.18 - கொரிய தீபகற்பத்தில் ஒருங்கிணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் ஐநா சபை பொதுக் கூட்டத்தில் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என்று தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை சியோலில் அறிவித்தார்.

தென்கொரியா மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில், கொரிய தீபகற்ப கடல் பகுதியில் இதுவரை 4 அணுகுண்டு சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து வடகொரியா மீது பொருளாதார தடைகளை ஐநா விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையை அகற்றும் வகையில்,ஸ அவ்வப்போது சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று வடகொரிய அதிபர் பியோங்யாங் கூறி வருகிறார்.

எனினும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வடகொரியாவும் தென்கொரியாவும் மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட ஜப்பான் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக தென்கொரிய பெண் அதிபர் பார்க் கியூன் ஹையுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஐநா சபையின் பொதுக்கூட்டத்தின் போது வடகொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த எங்களது வெளியுறவு அமைச்சக குழுவை அனுப்பதயாராக இருக்கிறோம் என்று தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை சியோலில் தெரிவித்தார்.

இந்நிலையில், நியூயார்க்கில் தொடங்கும் ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள, 15 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரீ சூயோங் சென்றிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்