முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியது மங்கள்யான்!

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை, செப். 25 - செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் நேற்று காலை 8 மணி அளவில் செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது..

வரலாற்று சிறப்பு மிக்க இந்த அரிய நிகழ்வை பெங்களூரில் உள்ள விண்வெளி கட்டுப்பாடு மையத்தின் தனி அறையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேரில் பார்த்தனர்.

செயற்கரிய இந்த சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கி பாராட்டினார்.

‘இன்று வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. செய்ய முடியாததை நாம் செய்து காட்டியிருக்கிறோம். இந்த சாதனையை நிகழ்த்திய ஒவ்வொரு இஸ்ரோ விஞ்ஞானிகளையும் இதற்கு துணை நின்ற நாட்டு மக்களையும் நான் பாராட்டுகின்றேன். மனிதனின் கற்பனைகளுக்கு அப்பாற் பட்ட எல்லையை நாம் கடந்து விட்டோம்.’ என்று நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

உலக அளவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட 51 முயற்சிகளில் 21 தான் வெற்றி பெற்று உள்ளது.

நாம் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இருக்கிறோம். இந்தியா உள்நாட்டிலேயே திட்டமிட்டு தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு இந்த சாதனையை படைத்து இருக்கிறது என்று நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள்யானை செவ் வாய் சுற்று வட்டத்தில் நிலை நிறுத்தியிருப்பதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், முன்னாள் சோவியத் ஒன்றியம் போன்ற சிறப்பு மிக்க நாடுகள் வரிசையில் இந்திய இடம் பிடித்துள்ளது.

சீனாவும், ஜப்பானும் இந்த முயற்சியில் தோல்வியை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.2008-ல் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் வெற்றிபெற்றதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்கான விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

2010-ல் மங்கள்யான் என்ற விண்கலம் உருவாக்கப்பட்டது. 2012-ல் இதை செவ்வாய் கிரகத்திற்கு செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து 2013 நவம்பர் 5-ல் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் 1350 கிலோ எடை கொண்டது ஆகும். 15 அடுக்குகளாக உருவாக்கப்பட்டது. கிட்டதட்ட நானோ கார் அளவுக்கு இதன் உருவ அமைப்பு இருந்தது. விண்வெளிக்கு ஏவப்பட்ட ஒரு மாத காலத்திற்கு உள்ளேயே இது பல்வேறு சோதனைகளை சந்தித்தது.

புயல், மழை என மாறுபட்ட வாணிலைகளுக்கு இடையே பயணம் செய்து பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல புரட்சிகளை நிகழ்த்தியது. பின்னர் படிப்படியாக இதன் உயரம் அதிகரிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.

செப்டம்பர் 24-ம் தேதி காலை 7 மணியளவில் செவ்வாயின் சுற்று வட்டப்பாதையை மங்கள்யான் அடையும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கணித்து இருந்தனர்.

இதற்கு இரு நாட்களுக்கு முன்பாகவே விண்கலத்தின் திரவ இன்ஜினை வெற்றிகரமாக இயக்கினர். இதையடுத்து செவ்வாய் சுற்றுவட்ட பாதைக்குள் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. திட்டமிட்டப்படி நேற்று காலை 7.41 மணி அளவில் மங்கள்யான் வேகத்தை குறைத்து அதை நிலைநிறுத்தும் பணியை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர். இந்த அரிய நிகழ்

வை பார்ப்பதற்காக விண்வெளி ஆய்வுத்துறையை நிர்வகித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம்இரவு பெங்களூர் வந்து விட்டார். கவர்னர் மாளிகையில் இரவில் தங்கிய அவர் நேற்று காலை 6 மணிக்கே பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைகட்டுப்பாட்டு அறைக்கு சென்று விட்டார்.

ஒவ்வொரு நிமிடமும் விஞ்ஞானிகள் ‘திக் திக்’ உணர்வுடன் செயல்பட்டு 8 சிறிய இன்ஜின்களை இயக்க வைத்து இந்த சாதனையை படைத்துள்ளனர். நேற்றிலிருந்தே செவ்வாயின் மேற்பரப்பு பற்றிய படங்களை மங்கள்யான் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 450 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் மிக சிக்கனம் ஆனது ஆகும்.

இது பற்றி பிரதமர் மோடி ஏற்கனவே குறிப்பிடுகையில் ஹாலிவுட் படத்தின் பட்ஜெட் கூட இதைவிட அதிகமானதாக இருக்கும் என்றார்.

புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியது......

செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது என்று பெங்களூரில் இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் பிச்சை மணி தகவல் தெரிவித்துள்ளார். மங்கள்யானில் உள்ள 5 கருவிகளில் ஒன்றான கேமரா வண்ண புகைப்படங்களை அனுப்பியுள்ளது. மங்கள்யான் அனுப்பிய புகைப்படங்கள் வெளியிடப்படும் என்று பிச்சை மணி தெரிவித்துள்ளார். மங்கள்யான் விண்கமல் நேற்று காலை 7.42க்கு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நேற்று இணைந்து உள்ள இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும், ஏற்கனவே செவ்வாய் கிரகத்துக்கே போய் இறங்கி சோத்னைகளை நடத்தி அமெரிக்கவின் கியூரியாசிட்டி விண்கலமும், டிவிட்டர் மூலம் பேசின.

நமஸ்தே.. ! கியூரியாசிட்டி ரோவர் பெயரில் அனுப்பப்பட்ட டிவிட் செய்தியில், நமஸ்தே மார்ஸ் ஆர்பிட்ட்டர், இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் முதல் கிரகம் தாண்டிய பயணத்தின் சாதனைக்கு பாராட்டுகள் என்று கூறப்பட்டிருந்தது

கியூரியாசிட்டியின் டிவிட்டில்.

ஹவ்டி.. மார்ஸ் கியூரியாசிட்டி? பதிலுக்கு மங்கள்யான் விடுத்த டிவிட்டில், ஹவ்டி மார்ஸ் கியூரியாசிட்டி.. தொடர்ந்து என்னுடன் தொடர்பில் இரு.. நானும் இங்கேயேதான் இருப்பேன்...

சரி, இட்லி சாப்பிட்டு வர்றேன்... காத்திரு! மங்கள்யான் விடுத்துள்ள இன்னொரு டிவிட்டில், சரி, நான் பிரேக்பாஸ்ட்டை முடித்து விட்டு வருகிறன்.. என்னா வெயில் என்னா வெயில்.. பேட்டரி உனக்கு நல்ல தீனிதான் இன்று....!என்றன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்