முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சென்ட்ரல் - காச்சிகுடா இடையே சிறப்பு ரயில்

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.அக்.1 - சென்னை சென்ட்ரல் - காச்சிகுடா இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விஜயதசமி போன்ற பண்டிகை நாள்களில் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அந்த வரிசையில் பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - காச்சிகுடா இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

காச்சிகுடா - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (02760): காச்சிகுடாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (அக்.5) இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நண்பகல் 12 மணிக்கு வந்தடையும்.

சென்னை சென்ட்ரல்-காச்சிகுடா அதிவிரைவு ரயில் (02759): சென்னை சென்ட்ரலிருந்து திங்கள்கிழமை (அக்.6) பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு காச்சிகுடா ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் நல்கொண்டா, மிர்யால்குடா, மல்கஜ்கிரி, குண்டூர், நெல்லூர், கூடூர், சூளூர்பேட்டை, ஓங்கோல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரலிருந்து புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்