முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டு கடன் பெற்ற 56,373 பேருக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம், அரசு/வணிக வங்கிகள்/ நிதிநிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையினை அரசின் நிதியுதவி இல்லாமல் செலுத்தவும், மீண்டும் முதன்மைச் சங்கங்களுக்கு கடன் வழங்கி புத்துயிர் வழங்கவும் தற்பொழுது மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மாபெரும் சலுகைத்திட்டத்தினை செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 01.04.2012 முதல் 30.06.2014 வரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா  ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட  தள்ளுபடி சலுகை திட்டங்களின் மூலம்  கடன் பெற்ற உறுப்பினர்களில்  56,373 பயனாளிகள் சுமார் ரூ.464.10  கோடியளவிற்கு வட்டி மற்றும் அபராத வட்டி சலுகை பெற்று அனைத்து பிரிவு உறுப்பினர்களும் பயனடைந்து  49,364  பயனாளிகளின்  பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணைய அளவில் முதன்மைச் சங்கங்களுக்கு 31.12.2013க்கு முன் குறைந்த /நடுத்தர மற்றும் உயர்வருவாய் பிரிவு கடன்கள்/அடமான கடன்கள்/திட்டக்கடன்கள்/மனைப்பிரிவு ஆகிய திட்டங்களில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்ற உறுப்பினர்கள் வட்டிச் சுமையினை குறைக்கும் வகையில் அசல் மற்றும்  வட்டி செலுத்த முன்வருபவர்களுக்கு அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மீண்டும்  வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி திட்டத்தில்   இணைய நிதி மூலம் கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கங்களில்  கடன் பெற்ற கடன்தாரர்கள்  தங்களது தவணை தவறிய அசல் மற்றும் வட்டியினை செலுத்த முன்வருபவர்களுக்கு  தவணை தவறிய தொகைக்கான  வட்டி மற்றும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனவே உறுப்பினர்கள் இத்தள்ளுபடி சலுகையினை பயன்படுத்தி தாம் பெற்ற கடன்களுக்கு செலுத்தவேண்டிய தவணைத் தவறிய தொகையினை, சங்கத்திற்கு நிலுவையின்றி உடன் செலுத்தி சட்டபூர்வ நடவடிக்கையினை தவிர்த்திடுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து